/* ]]> */
Mar 162017
 

நம் நாட்டில், தென்மேற்குப் பருவக் காற்றைவிட , வடகிழக்குப் பருவக் காற்றில் குறைவாக மழை பொழிகிறதே, அது ஏன்?:

தென்மேற்குப் பருவக் காற்றானது இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் என இரு கடல்களின் மீது படர்ந்து வந்து , இந்தியா மீது வீசுகிறது.கடலின்மீது பாய்ந்து வருவதால், கூடுதல் நீராவியை இந்தப் பருவக் காற்று கொண்டுவரும். வடகிழக்குப் பருவக் காற்று வங்காள விரிகுடா மீது மட்டும் பாய்ந்து வீசுகிறது. எனவே குறைவான நீராவியையே கொண்டுள்ளது. இக்காற்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் ம்,அழையைப் பொழியச் செய்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பொழியும் மழையில் 70 சதவிகித மழை  ஜூன் முதல் செப்டெம்பர் வரை நீளும் தென்மேற்குப் பருவக் காற்றின்மீது பொழிகிறது. இந்தக் காலத்தில் சுமார் 89 செ.மீ. மழைப் பொழிவு இருக்கும். லடாக் போன்ற ஒருசில பகுதிகள் தவிர, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்த மழைப் பொழிவு இருக்கும். ஆனால், வடகிழக்குப் பருவமழை கோரமணடல் கடலோரப் பகுதியான ஆந்திரத்தின் சில பகுதிகள், தமிழகம், தென் கேரளம்  ஆகிய பகுதிகலில் மட்டுமே பெய்யும். நாட்டின் மொத்த மழையில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே இந்த மழையால் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் 40 சதவிகித மழை தமிழ்நாட்டில் 48 சதவிகிதமழை வடகிழக்குப் பருவத்தில்தான் பொழிகிறது. சோழமண்டலக் கடற்கரைதான். பொர்ச்சுகீசியர்களால் கார மண்டல் என்று அழைக்கப்பட்டதாக்வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காரி ஆற்றங்கரைப் பகுதியான கோடியக் கரையிலிருந்து , ஆந்திரத்தில் உள்ள கிருஷ்ணா நதி வரையிலான கடற்கரைப் பகுதி கோரமணடலக் கடற்கரையாகும். ^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>