/* ]]> */
Sep 152021
 

நம் குணங்களை அச்சு அசலாக நகல் எடுக்க முடியுமா?

நம் குணங்களை அச்சு அசலாக நகல் எடுக்க முடியுமா

நம் குணங்களை அச்சு அசலாக நகல் எடுக்க முடியுமா?- இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள மரபணுக்கள் சற்றேறக்குறைய  99.9 சதவிகிதம் சமமாக இருக்கும். எனவே உங்களுக்கும் எனக்கும் இடையே  இடையே உள்ள தனித்துவ வேறுபாடுகளை மரபணுக்களின் வேறுபாடுகளைக் கொண்டு மட்டும்  விளக்க முடியாது. நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், குணங்கள் ஆகிய இரண்டும் நாம் சந்திக்கும்  வரலாற்றை ஒட்டியே அமைகின்றன.

எடுத்துக்காட்டாக எனது காலில் ஒரு வடு உள்ளது.சிறு வயதில் சாலையைக் கடக்கும்போது ஒரு வாகனம் மோதியதன் விளைவாகவே வடு ஏற்பட்டது. அதே போல கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் உடலில் அதற்கு எதிரான ஆன்டிபாடி (Antibody) இருக்கும்.  இப்படி நம் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள்தான் நம்மைத் தனித்துவம் கொண்ட ஒரு நபராக செதுக்குகின்றன.

ஆகையால் இரண்டு நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அச்சு அசலாக எப்போதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுபோலவே நம் குணங்களை அச்சு அசலாக நகலெடுப்பதும் சாத்தியம் இல்லை.

8888888888888888888888888888888

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>