/* ]]> */
Jan 152012
 
luv

 

எந்தவித கணக்கீடுகளுக்குள்ளும்
அடங்குவதில்லை
நம் காதல் …

விழுந்து எழுந்து
வளைந்து நெளிந்து
ஏதோ ஒரு விகிதத்தில்
அது
ஓடிக்கொண்டேயிருக்கும் …!

உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் …

பூமராங் போல
எங்கே போனாலும்
என் மனம்
மீண்டு வந்து
உன் கைகளுக்குள்ளேயே அடங்கும் …!

அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் …

உனக்காக கவிதைகள்
என்ற பெயரில்
நான்
ஏதேதோ கிறுக்கியதால் தான்
சொன்னான் பாரதி
தமிழ் இனி மெல்ல சாகும் …!

கடன் கொடுத்தார்
நெஞ்சம் போல்
பதைபதைக்க வைத்தாலும்

பிரிந்திருக்கையில்
உலகமே நீயாய்
உன்னோடிருக்கையில்
நீயே உலகமாய்
எல்லாமுமாய் என்னுள்
எரிந்து கொண்டேயிருக்கும்
தீயாய்
நம் காதல் …!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>