நம் உடலில் காயம் ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுகிறோம். பகுத்தறிவில்லாத மருந்து சரியாக காயம் ஏற்பட்ட இடத்திற்கு சென்று எப்படி அதை ஆற்றுகிறது?
கண்களில் பாதிப்பு என்றால் கண்களில் சொட்டு மருந்து இட்டுக் கொள்கிறோம். மூக்கு அடைத்துக் கொண்டால், மூக்கின்மீது அதற்கான களிம்பு தடவுகின்றோம். அல்லது இன்ஹேலரை மூக்கில் உள்ளிழுத்துக் கொள்கிறோம். காயத்தின்மீது நேரடியாக சிலவகை களிம்புகள் தடவுகின்றோம்.
ஆனால் வாய் வழியாக உட்கொள்ளும் மாத்திரைகளும் மருந்துகளும் எப்படி பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு மட்டும் நிவாரணம் வழங்குகின்றன?
நாம் உள்ளுக்குள் சாப்பிடும் மாத்திரைகளும் மருந்துகளும் கல்லீரலில் பிரிக்கப்படுகின்றன. இப்படி பிரிக்கப்பட்ட சத்துகள் ரத்தத்தால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. ரத்தம் உடல் முழுவதும் பயணம் செய்கிறது. எங்கே எந்தச் சத்து தேவையோ, அதை ஆங்காங்கே உள்ள செல்கள் கிரகித்துக் கொள்கின்றன. அல்லது உறிஞ்சிக் கொள்கின்றன. இப்படித்தான் காயம் ஏற்படும் பகுதி ரத்தம் அந்த இடத்துக்கு வரும்போது தன் பாதிப்பை சரி செய்யும் சத்துக்களை ரத்தத்திலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றது.
அதாவது மற்ற நிலப் பகுதிகளை விட உலர்ந்த பாளமாக வெடித்திருக்கும் மண் பகுதி வெகு வேகமாக நீரை உறிஞ்சிக் கொள்வதைப் போல , காயம் பட்ட பகுதி செயல்படுகிறது.
***************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments