/* ]]> */
Jan 122012
 

நண்பன் சினிமா விமர்சனம் -  நண்பன் திரை விமர்சனம்

- நண்பன் சினிமா விமர்சனம்

நண்பன் விமரசனம்

Nanban movie review நண்பன் விமர்சனம்

Nanban movie review நண்பன் விமர்சனம்

இயக்கம் : ஷங்கர்

தயாரிப்பு : ராஜு ஈஸ்வரன்

திரைக்கதை : ஷங்கர் , மதன் கார்க்கி

கதை : ராஜி ஹிரானி

சேதன் பகத் எழுதிய ஃபை பாயின்ட் சம் ஒன் வாட் நாட் டு டு அட் ஐ ஐ டி என்ற நாவலை தழுவியது

இசை : ஹாரீஸ் ஜெயராஜ்

கேமரா : மனோஜ் பரமஹம்சா

எடிட்டிங்க் : அந்தோனி

 

நடிப்பு : விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன்

 

கதை :

கல்லூரி முடிந்து சில வருடங்கள் கழித்து தொலைந்த நண்பனைத் தேடுகிற இரண்டு பேர் ஜீவாவும் ஸ்ரீகாந்தும். காரணம் , அந்த நண்பன் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி வைத்திருக்கிறான்… கூடவே சத்யன் அதே ஆளைத் தேடி – ஆனால் பழி தீர்க்கும் நோக்கத்தோடு !

ஃப்ளாஷ்பேக் :

இனிமையான கல்லூரி சூழல். குறும்பு கொப்பளிக்க அறிமுகமாகிறார் விஜய். கூடவே ஜீவா ஸ்ரீகாந்த்.. ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் தன் கனவுகளை தன் அப்பா அம்மாவிற்காக தியாகம் செய்து இஞ்சினீரிங்க் படிக்க வருபவர். ஜீவா மிடில் கிளாஸ் குடும்ப அழுத்தத்தில் தத்தளிப்பவர். விஜய், பெரிய பணக்காரரின் வாரிசாக கவலையே இல்லாமல் கல்லூரியில் வலம் வருபவர். கொடுங்கோல் பிரின்ஸ்பலாக சத்யராஜ். அவரின் அழகு மகளாக இலியானா. பிரின்சிபாலுக்கு ஜால்ரா போடும் மாணவனாக சத்யன். இப்படி ஒரு சூழலில் , இவர்களுக்கு வரும் பிரச்சினைகளை விஜய் தனது அநாயாசமான விட்டேத்தியான ஸ்டைலில் தீர்க்கிறார். அவர்களின் மதிப்பை பெறுகிறார். கூடவே சத்யராஜ் மற்றும் சத்யனின் எரிச்சலையும். அதெல்லாம் மீறி தன் நண்பர்களை காப்பாற்றி எல்லாரும் டிகிரி வாங்குகிறார்கள்… பின் விஜய் காணாமல் போகிறார்… அவரைத் தேடித் தான் இவர்கள்.

ஆனால் அங்கே போய் பார்த்தால் விஜய் பெயரில் இன்னொருவர்… அவர் தான் ஒரிஜனல் பணக்காரரின் மகன்.. விஜய் அவருக்கு சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுக்க வந்த பினாமி எனத் தெரிகிறது….

மீண்டும் தேடல்… இடையில் இலியானாவுக்கு நடக்க இருந்த திருமணத்தையும் காலி செய்து அவரையும் கூட்டிக் கொண்டு விஜயைத் தேடுகிறார்கள்…

கடைசியில் தங்கள் நண்பனை அவர்கள் சந்தித்ததுன் அந்த நண்பன் என்னவாக இருந்தான் என்பதும் தான் க்ளைமேக்ஸ்…

நடிப்பு :

நண்பன் விமர்சனம் nanban cinema review
நண்பன் விமர்சனம் nanban cinema review

விஜய் : விஜய்க்கு இது மாறுபட்ட களம்… கூடவே இளமை துள்ளும் கல்லூரி ரோல் வேறு… பின்னி விட்டார் இளைய தளபதி.. அந்த குறும்பு பார்வையாகட்டும் .. நண்பர்களுடன் அடிக்கும் கொட்டமாகட்டும்.. சத்யராஜிடம் மருள்வதாகட்டும்.. இலியானாவுடன் இணைவதாகட்டும் .. அமீர்கானுக்கு தான் கொஞ்சமும் சளைத்தவனில்லை என நிரூபித்துவிட்டார்.

ஜீவா : மிடில்கிளாஸ் பயந்த சுபாவ பையனாய் வெகு அற்புதமாய் ஜீவா ட்ரான்ஸ்பார்ம் ஆகிறார். நண்பர்களுடன் கொட்டமடிக்கையில் அடித்து பின் குடும்பத்தை எண்ணி குழம்புகையில் அருமையாய் உணர்ச்சியை காட்டுகிறார்.

ஸ்ரீகாந்த் : தன் கனவைப் பற்றிய பார்வை மினுமினுப்பை காட்டி, நண்பனுக்கான பரிபூர்ண நம்பிக்கை காட்டி.. ஆஹா ஸ்ரீகாந்தும் நடிக்க வருகிறது!

நண்பன் விமர்சனம்
நண்பன் விமர்சனம்

இலியானா : இன்ச் இடுப்பழகி … ஒல்லியான கில்லி விஜயுடன் இவர் ஆரம்பத்தில் அடிக்கும் ரகளை சூப்பர். காதல் காட்சிகளிலும் படு செக்சி!

சத்யராஜ் : மாறுபட்ட ரோல்.. தன்னுடைய மேனரிசங்களை அதிகம் புகுத்தாமல் கொடுத்த ரோலை புரிந்து கொண்டு செய்திருக்கிறார். சத்யராஜுக்கு முதல் இன்னிங்கஸ் வில்லன்… இரண்டாவது இன்னிங்க்ஸ் ஹீரோ .. இப்போது சப்போர்டிங்க் ரோல் என மூன்றாவது இன்னிங்க்ஸில் அடி வத்திருக்கிறார்.. இதிலும் ஒரு ரவுண்டு வருவார்!

சத்யன் : மனுஷன் என்னமாய் எரிச்சல் மூட்டுகிறார். அந்த காலேஜ் பேச்சு சீன்… சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது !

இசை : ஹாரீஸ் ஜெயராஜ் : என் ஃப்ரண்ட போல, அஸ்கு லக்கா பாடல்கள் மட்டும் ஒரு முறை கேட்டால் முணுமுணுக்க வைக்கிறது !

கேமரா : மனோஜ் அழகாக செய்திருக்கிறார். ஆனால் ரோட் சீன்கள் ஹிந்தியில் இன்னமும் பக்காவாக இருந்தது.

இயக்கம் : ஷங்கர் : இந்தப் படத்துக்கு ஷங்கர் தேவையா என நான் அதிகம் யோசித்ததுண்டு. ஷாட் பை ஷாட் சீன் பை சீண் எடுக்க தமிழின் முதன்மை இயக்குநர் எதற்கு ? ஒருவேளை ரீமேக்கை கொலை செய்யாமல் எடுப்பதற்கோ! எனிவே.. ஷங்கர் ட்ரீட் இல்லை இது… ஆனால் வித்தியாசமான கல்லூரி ஜாலி ட்ரீட் !

ப்ளஸ் :

வித்தியாச விஜய்

சூப்பர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் கெமிஸ்ட்ரி

ஜெட்வேகவித்தியாசமான திரைக்கதை

மைனஸ்

ரெண்டாவது பாதி நீள நீள வசனம்

பட டெம்போவுக்கு  பொருந்தாத இசை

பார்க்கலாமா ? :

ஷ்யுர் ! ஆல் இஸ் வெல் !

ஃபைனல் வெர்டிக்ட் : நண்பன் நச் ரீமேக்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>