/* ]]> */
Apr 042012
 

நட்சத்திரங்களை காதலிக்கும் நட்சத்திர நாயகன் டாக்டர் சுரேஷ்மோஹன்

சிறந்த மருத்துவர்

ஒரு மனிதனால் இரண்டு துறைகளில் பிரசித்தி பெறமுடியுமா என்றால் சற்று யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் இது சாத்தியம் என்று நிரூபித்துவிட்டார் சென்னையை சேர்ந்த டாக்டர் சுரேஷ்மோஹன். இவருக்கு தமிழ் நாடு டாக்டர் M.G.R. மருத்துவ பல்கலைக்கழகத்தை சார்ந்த துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் அவர்கள் தலமையில், சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் அவர்கள் சிறந்த மருத்துவர் என்ற விருதினை டாக்டர் சுரேஷ்மோஹனுக்கு வழ்ங்கினார். டாகடர் சுரேஷ்மோஹன் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் மற்றொரு துறை நட்சத்திரங்களுடன் உரவாடும் ஆஸ்டிரோபோட்டோகிராபர்(Astrophotography). இரவில் வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் தான் இவருடைய நாயகன், நாயகிகள். நட்சத்திரங்களையும், கோள்களையும் விதவிதமாய் வண்ணப்படம் எடுப்பதே இவரின் விருப்பமாகும். டாக்டரின் சில புகைப்படங்கள் !

உலகில் பத்தாயிரம் ஆஸ்டிரோபோட்டோகிராபர்களில் ஒருவரும், இந்தியாவின் ஒரே ஆஸ்டிரோபோட்டோகிராபர் என்ற பெருமைக்குரியவர். இவர் டிஜிட்டல் ஆஸ்டிரோ நடுவர் (Dijital astro moderator) என்பது கூடுதல் பெருமைக்கொள்ளக்கூடிய நட்சத்திர நாயகர்

சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இருந்து, இவரின் இரு துறைகளின் பிரசிதத்தை சிறப்பிக்கும் வகையில், இவரை ஸ்டான்லியன் விருதினை வழங்கி கவுரவித்தனர்.

இவரை பற்றிய கட்டுரை 2010ல் ஜனவரி மாதம் இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது என்பது மற்றொரு கூடுதல் பெருமைக்குரிய விஷயமாகும்.

இவரின் திறமைகளை கவுரவிக்கும் வகையில் மூன்றாம்கோணம் சார்பில் நாமும் அவரை வாழ்த்துவோம்

- மாதங்கி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>