1அஞ்சலிக்கு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் மட்டுமே பிடிக்கும். ஷாப்பிங் சென்றால், முதலில் தேடுவது லேட்டஸ்ட் டிசைனில் உள்ள ஜீன்ஸ் பேண்ட்டைத்தான். வீட்டில் 50க்கும் மேற்பட்ட ஜீன்ஸுகளும், டீ ஷர்ட்டுகளும். குவிந்து கிடக்கிறதாம்.
2. இன்னும் சில மாதங்களில், சிம்ரன் சினிமாப்படம் தயாரிக்கப் போகிறாராம். அதற்காக வெளிநாட்டு இயக்குனர்கள் இயக்குனர்கள் எழுதிய புத்தகங்களையும்,திரைக்கதை அமைப்பது எப்படி என்ற புத்தகங்களையும், தேடிப் பிடித்து வாங்குகிறாராம்.
3. மாடர்ன் கேரக்டர்களாகவே இருப்பதால், நெற்றி நிறைய குங்குமம் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறுவதில்லையாம்.இதனால், ஹைதராபாத் வீட்டில் இருக்கும்போது மட்டும் குங்குமப்பொட்டுடன் காட்சி தருகிறார் அப்சரா.
4. இப்போது செல்ஃப் டிரைவிங் கிடையாதாம். காதல் விவகாரத்துக்குப் பிறகு நயந்தாரா அடிக்கடி டென்ஷனாகி விடுவதால், கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டாராம்.
5. ஷூட்டிங் இல்லாத நாட்களில் , ஓவியங்கள் வரைவதில் மோனிகா அதிக கவனம் செலுத்துகிறாராம். இதுவரை வரைந்துள்ள ஓவியங்களைப் பாதுகாத்துவரும் அவர், அவற்றைப் பற்றிப் பெருமையாக சொல்லிக் கொள்வதில்லை.
6. பெங்களூருக்குச் சென்றால், ஆட்டோவில் ஜாலியாகச் செல்வாராம், பத்மப்பிரியா. ஆனால், இங்கு, சென்னையில் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்வதால், அது முடிவதில்லையாம். எங்கு சென்றாலும் கார்தானாம். ஆனால் ஆட்டோவில் செல்வதில் அலாதிப் பிரியமாம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments