/* ]]> */
Dec 202011
 

நடிகை அமலா:

Amala

மாடு ஒன்று காலில் அடிபட்டு வலியால் கத்தியதாம். ‘ ம்மா…ஆ”  என்று அது எழுப்பிய குரல் ‘ அமலா’ என்பதுபோல் இருந்ததோ?ஒருநாள் ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த  நடிகை அமலா வழியில் மாடு ஒன்று காலில் அடிபட்டு வலியால் கத்தியது. பலரும் அதைப் பார்த்தும் பாராததுபோல் சென்றுவிட்டனர். அது இவரை ரொம்பவே பாதிக்க  உடனே ஒரு வண்டியை வரவழைத்து மாட்டை வீட்டுக்குத் தூக்கி வந்துவிட்டார். சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். அதன்பின் அருகே செல்லும்போதெல்லாம் அந்த மாடு இவரை ஒருவிதக் கனிவோடு பார்க்கிறதாம்.

இப்படியாக  அனாதையான , துன்பப்படுகிற ஆடு, பூனை  நாய் என்று எதுவானாலும் வீட்டுக்குத் தூக்கிவந்து சிகிச்சை அளிப்பது இவரது வழக்கமாம்.  ஒருமுறை வெளியூர் ஷூட்டிங் போய்விட்டு திரும்பிவந்து ‘ என்ன நம்ம வீடு மிருகக் காட்சிச் சாலை ஆகிவிட்டதா?’ என்று அதிசயித்த கணவரிடம், விவரம் சொன்ன அமலா, வன விலங்குகளை பராமரிப்பதற்காக ஒரு ஷெட் அமைத்திருக்கிறார்.  ஐதராபாத்தில் ஒரு ப்ளூ கிராஸ் தொடங்கி, முதன்முதலாக  கணவர் நாகார்ஜுனால் வாங்கித் தரப்பட்ட ஒரு ஆம்புலென்ஸோடு   இப்போது 4 ஆம்புலென்ஸ்கள் உள்ளனவாம். கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ மையமும் அமைத்துள்ளார்.  ‘ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரும் இவரும் ஒன்றல்லவா?

amala

மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு தடுப்பூசி, உணவு , இருப்பிடம் என்று எல்லாத் தேவைகளையும் அளிப்பதுதான் இவருடைய வேலை. அது மட்டுமின்றி மிருகங்களுக்காக இவர் சில தியாகங்களும் செய்திருக்கிறார். அசைவ உணவுகள் உண்பது கிடையாது. பால், நெய்கூட சேர்ப்பதில்லை. அதுமட்டுமல்ல. விலங்குகளின் தோல் மற்றும். அதன் உறுப்புகளால் செய்யப்படும் செருப்பு, கைப்பை, கிரீம்  உள்ளிட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்தவும் மாட்டார்.

நடிகரும் கணவருமான நாகார்ஜுன் இவரைப் பற்றிக் கூறுகையில் ” ப்ளூ கிராஸ் அமைப்பு மட்டுமல்ல… சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, விதவை-சிசு பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி என 10க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளில் அமலா தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். என்னைவிட அதிக பணிச்சுமை அவருக்குத்தான்.” என்கிறார்.

amala

சரி , சினிமாவுக்கு மறு பிரவேசம் உண்டா? என்றால் இல்லை என்பதுதான் இவரது பதில். ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால் என பல மொழிகளின் உச்ச நட்சத்திரங்களுடன் திரையில் இணைந்து கொடிகட்டிப் பறந்தவர் அமலா.  நிழல் திரையில் இணந்த நாகார்ஜுனை நிஜத்தில் கைப்பிடித்து  நாகார்ஜுனுடன் சிறப்புற வாழ்ந்து ‘ சிறந்த நட்சத்திர தம்பதி ‘ என்ற அந்தஸ்த்தையும் பெற்றிருக்கிறார்.

அமலா

“அனைத்து தென்னிந்திய  மொழி மற்றும்  இந்திப் படங்களிலும், இடைவெளியின்றி  365 நாட்களும் ஓய்வே இல்லாமல்  உழைத்து பணமும் புகழும் சம்பாதித்தது உண்மைதான். ஆனால் அப்போது வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம் ” என்கிறார். ” 1992-ல் சினிமாவை விட்டு விலகினேன். இப்போது எப்படி நடிக்கவேண்டும் என்பதுகூட மறந்துவிட்டது” என்கிறார் அதைவிட , தற்போது மனநிறைவோடு தான் செய்துவரும் சேவைப் பணிகளில் சந்தோஷம் காண்பதாகக்  கூறுகிறார். அதிலிருந்து விடுபட்டு மீண்டும் சினிமாவில் நுழைவது என்பதை முடியாத ஒன்றாகவே கருதுகிறார்.  ” நல்ல கதாபாத்திரம் தருகிறோம். நடித்துக் கொடுங்கள்” என்று சில இயக்குனர்கள் அழைக்கிறார்கள். “நிஜத்தில் கணவருக்கு மனைவியாக , பிள்ளைக்கு தாயாக இருப்பதில் அதிக சந்தோஷத்தைக் காண்கிறேன். சினிமா நெருக்கடியில் குடும்ப மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்க விருப்பமில்லை” என்கிறார், அமலா.

amala

தினமும் நடனப் பயிற்சி மேற்கொள்வது, கொழுப்பு இல்லாத உணவு உண்பது, பகலில் தூங்காமை முதலியவைகளை இவரது ஆரோக்கிய -அழகு ரகசியமாகக் கூறுகிறார். குடும்ப வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட இவரை ” எனக்கான வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்டவர் அமலா. அதுதான் நான் செய்த பாக்கியம் ” என்கிறார் கணவர் நாகார்ஜுன். அவர் மட்டுமா? வாய் பேச முடியாத விலங்குகளும் கூட பேச முடிந்தால் அப்படித்தானே சொல்லியிருக்கும்.

அன்னை தெரசா போல அன்புள்ளம் கொண்ட அமலா போன்ற மனித தெய்வங்கள்  எப்போதோ ஒருமுறைதான் மனிதர்களாக பிறப்பார்கள். பின்னர் தெய்வத்துள் வைத்து பார்க்கப்படுவார்கள்.

அமலா! உங்கள் நல்ல மனம் வாழ்க!

tags : actress amala, tamil cinema actress amala, amala + nag, amala + blue cross, blue cross india,  அமலா, நடிகை அமலா, ப்ளூ க்ராஸ், அமலா + நாகார்ஜுனா, தமிழ் நடிகை அமலா,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>