/* ]]> */
Jul 042011
 

சிக்ஸ் பேக் வைக்க‌ப் போகும்  நடிகர்

விஜய் – சினி நொறுக்குத்தீனி

vijay

1. உடம்பை ஏற்றும் முயற்சியில் உடற் பயிற்சியைத் தொடங்கி விட்டார், நடிகர் விஜய்.  சீமான் இயக்கும் ‘ பகலவன் ‘ படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரி கேரக்டர்; அந்த போலீஸ் அதிகாரி வாட்டசாட்டமானவர்; அதனால், உருண்டு திரண்ட தோற்றம் அவசியம்” என்று சீமான் சொன்னதுதான் காரணமாம். சிக்ஸ் பேக் வைக்க‌ப்போகிறார் விஜய்

 

 

2. ‘ ஆனைமலை கந்தன் ‘ படத்தில் கருணாசுக்கு தங்கையாக வருபவரின் கேரக்டர் +2 படிப்பவராக இருந்தது. ஆனால்,  ’களவாணி ‘யில் விமலின் தங்கையாக நடித்த மனீஷாவின் தோற்றமோ பத்தாம் வகுப்பு படிப்பவர்போல் இருந்ததால், கேரக்டரை மாற்றுவதா என்ற குழப்பத்திலிருந்த  இயக்குனர் மனோகர், கடைசியில் மனிஷாவை விட்டுக்கொடுக்க முடியாமல்,  கேரக்டரை பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையாக மாற்றிவிட்டார்.

 

4. தங்கர் பச்சானின் ‘ அழகி ‘, ‘ தென்றல் ‘ முதலிய படங்களில் வில்லனாக நடித்தவர் அருள்மணி. அவர், ‘ ஒரு சந்திப்பில் ‘ படத்தில் மனைவியை சந்தேகப்பட்டு அதனால் குடும்பதையே இழந்துபோகும் குடும்பத் தலைவன் கேரக்டரில் கதாநாயகனாக நடித்தார். ‘ இனிமேல் கதாநாயகனாகத்தான் நடிப்பீர்களா? ‘ என்று கேட்டால், ‘ வித வித வில்லன் கேரக்டர்கள்தான் இவரது லட்சியம் என்கிறாராம்.  ’ ஒரு மழை நான்கு சாரல் ‘, ‘ நினைவில் நின்றவள் ‘ ,  ’ தாண்டவக்கோனே ‘ படங்களில் வில்லன் கேரக்டர்களில் மிரட்டியிருக்கிறாராம்.

 

 

ileana

 

5. ‘நண்பன் ‘ படத்தில் இலியானாவின் அக்கா கேரக்டரில் நடிக்கிறார் , அனுயா. உண்மையில் இலியானாதான் வயதில் பெரியவராம்.

anuya

6. ‘ செவன் ‘ படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்,  நதியா.

7. ராசு மதுரவன் இயக்கும் ‘ பார்த்தோம் பழகினோம் ‘ படத்தில் காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக நடிக்கிறார்.

8. நடிகர் அஜ்மல்கான்,  ’ பாசக்கார நண்பர்கள் ‘ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர், இப்போது தன் பெயரை ‘ யுவன் ‘ என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>