/* ]]> */
Aug 212014
 

நடிகர் சித்தார்த்தின் திருமணம்:

MARRIAGE OF SIDHDHARTH
‘ஜிகிர்தண்டா’வைத் தொடர்ந்து, இந்த ஆண்டு வெற்றிகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கிறார், சித்தார்த். ஒரு புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். ஆனால், திருமணத்தைப் பற்றிப் பேச மறுக்கிறார். அவருக்கு நாகதோஷம் இருப்பதால், பெற்றோர்கள் காளஹஸ்தியில் பரிகார பூஜை செய்துள்ளதாக மட்டும் குறிப்பிட்டார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் இரண்டு புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். அந்தப் படங்கள் சாதாரன படங்கள் போல் இருக்காது என்றும், அவைகளை தான் ரிஸ்க் எடுத்து பண்ணப்போவதாகவும் அறிவித்தார்.
நடிகர் விஷாலின் கதாநாயகி யார்?:

VISHAL AND LAKSHMI MENAN
இயக்குனர் சுசீந்திரனின் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியை டைரக்டர்தான் தேர்வு செய்வார். அந்த விஷயத்தில் எல்லாம் தலையிடமாட்டோம் என்று நல்ல பிள்ளையாக கூறிக்கொண்டாலும், நாயகர்கள் பொதுவாக தங்களுடைய விருப்ப நடிகைகளையோ அல்லது ‘டாப் 5′ ல் உள்ள நடிகளில் ஒருவரையோதான் சிபாரிசு செய்வார்கள். இதனால், விஷாலின் வெற்றிப்படநாயகியான லட்சுமி மேனனையே நாயகியாகப் போட்டுவிடலாம் என எண்ணி, சுசீந்திரன் கேட்க, அவரோ” சமந்தாவைப் போடுங்க ” என்று கூறிவிட்டாராம்.
ஹன்சிகாவின் மேனேஜர்:

HANSIKA
‘ஹன்சிகாவின் மேனேஜர் நான்தான் ‘என்று சொல்லிக்கொண்டு ஒரு ஆள், கோலிவுட், பாலிவுட் என எல்லா இடங்களிலும் வேட்டையாடி வருகிறாராம். இதில் எனன் விஷேஷம் என்றால், அந்த ஆள் அனைத்து சினிமா பிரமுகர்களுக்கும் அறிமுகமானவராம். எனவே சிலர் அவரை நம்பி மோசம் போயிருப்பதாகத் தெரிகிறது. ஹன்சிகா ” என்னுடைய கேல்ஷீட் விவரங்களை என் அம்மா டாக்டர் மோனாதான் பார்த்துக்கொள்கிறார். எனவே யாரையும் நம்பி மோசம் போகவேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
யார் மீதும் நடவடிக்கை இல்லை என்கிறார், இயக்குனர் சங்கத் தலைவர்:

ACTORS PROTEST
சிங்கள அரசைக் கண்டித்து அண்மையில் இயக்குனர்களும் நடிகர்களும் நடத்திய போராட்டத்தில், முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. இதை இயக்குனர்கள் சங்கம் கண்டித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நடிகர் சங்கத்தை வற்புறுத்தியதாக கோலிவுட்டில் செய்தி பரவியது. இதுபற்றிக் கேட்டதற்கு, ” நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு வராத நடிகர்களைப் பற்றி நடிகர் சங்கத்திடம் பேசவும் இல்லை. யாரோ புரளி கிளப்பியிருக்கிறார்கள். “என்கிறார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன்.இன்னொரு தகவலையும் தெரிவித்தார். அது,” கச்சத்தீவு போராடட்த்திற்கு அனைவருக்கும் அழைப்பு உண்டு”எனப்துதான்.
சமந்தாவின் கவர்ச்சி யுத்தம்:

SAMANTHA AND SRUTHI
தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிஸியாகிவிட்ட சமந்தாவுக்கு இப்போது ராசியான நடிகை என ஆந்திராவில் முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. எனவே தானே ‘நம்பர் ஒன்’ என்கிறாராம், சமந்தா. நயந்தாராவின் கவர்ச்சி தரை தட்டிவிட்டதால், இவர் படு கவர்ச்சியில் இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள். முக்கியமாக ‘அஞ்சான்’ படத்தில் கவர்ச்சியின் உச்சம் தொட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தமன்னா, ஸ்ருதிஹாஸன் இருவரும் ஆந்திராவின் கதவைச் சாத்துவதற்கு தனது கவர்ச்சிதான் ஆயுதம் என்று தீர்மானித்துதான் அபப்டி நடித்திருக்கிறாராம். ‘அஞ்சானை’ தெலுங்கில் ‘சிக்கந்தர்’ எனப் பெயரிட்டு டப் பண்ணி இருக்கிறார்களாம். அதற்கான தனி விழாக்களிலும் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறாராம் ஆனால் சன்னி லியோன்களை சந்து முனையில் நிறுத்தி பாலிவுட்டையே கலக்கி வரும் ஸ்ருதிஹாஸனுக்கு இவருடைய சாகசங்கள் ஒரு பொருட்டாக இருக்குமா?. பொறுத்திருந்துதான் பார்கக்வேண்டும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>