/* ]]> */
Jun 212013
 

நடிகர் சசிகுமார் யாரையும் தனக்குப் போட்டியாக நினைப்பதில்லை என்கிறார். இவருடைய அடுத்த படத்தைத்தான் முதல் படத்துக்குக்கான போட்டியாக நினப்பாராம். இவரே எழுதும் கதைகள் இவருக்கு செட்டாவதோடு படமும் ஹிட்டாகிறது, என்கிறார். தனக்குக் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகள் தான் அமைகின்றன என்றும் அதுவே அனைவருக்கும் பிடிப்பதாகவும் சொல்கிறார். இவருடைய முதல் படமான ‘ சுப்ரமண்யபுரத்திலேயே கிராமத்துக் கதைக்குண்டான ரசிகர்கள் கிடைத்துவிட்டதாகவும் கூறுகிறார். இப்போதுவரை அவர்களுடைய ஆதரவு தொடர்கிறதாம். இவருடைய படத்தில் அரிவாள், கம்புகளின் பங்கு இருப்பதைக் குறிப்பிட்டால், ஒவ்வொரு படத்திலும் அரிவாள் வகையறாக்களைக் குறைத்துக்கொண்டு வருவதாகக் கூறுகிறார். கதைப் பின்னணி,சொல்லப்படும் சூழல்,இதை வைத்துத்தான் கம்பு, கத்தி எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. என்று சொல்லும் இவர், இனி வரும் படங்களில் இந்த விஷயங்கள் இருக்காது என்கிறார்.
தன்னுடைய ரசிகர்கள் பொதுவானவர்கள்தான். தனக்கென்று ரசிகர் மன்றமோ குறிப்பிட்ட ரசிகர்களோ கிடையாது என்கிறார். இவருடைய படங்கள் வரும்போது தியேட்டர்களில் கட் அவுட், பேனர், வாழ்த்து போஸ்டர் ஏதும் இருக்காது என்கிறார். ஆர்ப்பாட்டம், பரபரப்பு இல்லாத இந்த நிலை இவருக்கு மிகவும் பிர்டிக்கிறது என்கிறார். ஆனால் பொதுவான ரசிகர்களை இழந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதாகக் கூறுகிறார்.

Sasikumar

Sasikumar

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>