இன்றைய செய்தியும் நம்ம இடைச்செருகலும் – 10.06.11
நீச்சல் உடையில் நடிக்க காசு கேட்டேனா? – த்ரிஷா
செய்தி :
விஜய் நடித்த “காவலன்” படம் தெலுங்கில் “பாடி கார்ட்” என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் அவர் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அதற்கு சம்பளத்தில் கூடுதலாக ரூ.25 லட்சம் கேட்டதாகவும் தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியானது.
அதற்கு த்ரிஷா பதிலளித்துள்ளார்…
த்ரிஷா : நான் பிகினி உடையில் நடிக்க சம்மதித்ததாகவும் அதற்கு ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டதாகவும் வெளியான செய்திகள் ஆதாரமற்ற வதந்திகள். பாடிகார்ட் தெலுங்கு பதிப்பில் நீச்சல் உடை காட்சிகளே இல்லை…
நம்ம இடைச்செருகல் : அதானே… பாத்ரூம் ஷோவே இலவசமா எல்லாருக்கும் காட்டினவங்களாச்சே… ( நான் குருவி படத்துல டவல் கட்டிக்கிட்டு வர்ர காட்சிய சொன்னேன் ஹி ஹி )
படம் பார்த்தால் ஐஸ்க்ரீம் ஃப்ரீ….
செய்தி : லால்குடி அன்பு சினிமா தியேட்டர்காரர்கள் மாவீரன் படம் பார்க்க வந்தால் ரசிகர்களுக்கு ஐஸ்கிரீம் இலவசம் என பட விளம்பர போஸ்டருடன் விளம்பரம் வெளியிட்டனர். ஐஸ்கிரீம் இல்லாவிட்டால் பாப்கார்ன் இலவசம் என அறிவித்து உள்ளனர்.
நம்ம இடைச்செருகல் : பாத்துங்க… படம் பாக்க வந்தவங்க ஐஸ்க்ரீம் மாதிரி இருக்குற காஜல் அகர்வாலை ஃப்ரீயா கேட்டுடப் போறாய்ங்க…
பாபாவா பாட்ஷாவா?
செய்தி : ஊழல் ,கறுப்பு பண விவகார போராட்டத்தில் ஹரித்துவாரில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம்தேவ்வின் உடல்நலம் மோசம் அடைந்து வருகின்றது .
இந்நிலையில் பாபாராம்தேவ் லெமன்ஜூஸ் மற்றும் தேன்குடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . இதர்கிடையே ” போலீசை எதிர்கொள்ள தனது சீடர்கள் 11 ஆயிரம் பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படும். அவர்களுக்கு வேத பயிற்சி அளிப்பதுடன் ஆயுத பயிற்சியும் அளிக்கப்படும்.” என்று பாபா சொன்னது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நம்ம இடைச்செருகல் : நல்லா ஜூஸ் குடிங்க.. அப்படியே ஒரு பெக்கும் ஏத்திட்டிங்கன்னா வெறியோட நம்ம விஜய்காந்த மாதிரி சிவந்த கண்ணோட வர்ரவங்கள பொரட்டி எடுக்காலாமே!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments