தோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலைவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன?
பாலைவனச் செடிகளுக்கு மழை பெய்தால்தான்உண்டு. ஆனால் மழையே பெய்யாதபோதும்கூட பாலைவனத்தில் செடிகள் காணப்படுவதுண்டு. அவை ஒன்றும் உதிர்ந்து விடுவதில்லை. காரணம் அவை அந்த சூழலுக்கு ஏற்ப தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வதுதான். பாலைவனத்தில் தண்ணீர் என்பது அரிதானது.எனவே பாலைவனத்தில் உள்ள பல செடிகள் மிக நீளமான வேர்களைக் கொண்டவை. 20லிருந்து 40 மீட்டர் வரை கூட இந்த வேர்கள் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும். பூமியில் உள்ள ஈரப் பதத்தை இவை உறிஞ்சிக் கொள்ளும். பாலைவனத்தில் உள்ள வேறு சில தாவரங்கள் தங்கள் இலைகளை சிறிய அளவில் கொண்டிருக்கின்றன. அவற்றின் மேல்பகுதி மெழுகு போன்றது. ஈரப் பதம் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக இந்த மாற்றம். அதே சமயம் இந்த மெழுகு போன்ற பதம் இலைகளை அடைப்பதில்லை.
சில பளைவனத் தாவரங்களேதங்களது ஒளிச் சேர்க்கையை இலைகளுக்குப் பதிலாக தண்டுகளின் மூலம் நடத்துகின்றன. சில தாவரங்கள் மழைக் காலத்தின்போது இலைகளை உருவாக்கிக்கொண்டு கோடையின்போது அவற்றை உதிர்த்து விடுகின்றன.
பாலைவனங்களில் உள்ள சிலவகை விதைகள் கடுமையான வெயிலின்போது முளை விடாமல் மழை பெய்யும்போது மட்டும் முளை விடும். இப்படிப் பலவித சாகசங்களில் ஈடுபட்டு பலைவனங்களிலும் தாவரங்கள் உயிர் வாழ்கின்றன.
**************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments