/* ]]> */
Aug 182015
 

தொழில் நுட்பம்:

உளவிலிருந்து விண்வெளி விஞ்ஞானத்திற்கு:

உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி டென்னிஸ் டிட்டோ என்ற அமெரிக்க கோடீஸ்வரர்தான். 2001 ஏப்ரல் 28 அன்று ரஷ்ய விண்வெளி அமைப்பு தங்கள் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) அனுப்பியபோது, கூடவே டிட்டோவையும் அனுப்பியது. விண்வெளியில் ஐ. எஸ்.எஸ்.இ.பி 1குழுவினருடன் டிட்டோ 7 நாட்கள், 22 மணி நேரம், 4 நிமிடங்கள் இருந்துவிட்டு திரும்பினார். நாசா அதிகாரிகள் இதுபோல் சிவிலியன்களையெல்லாம் டூரிஸ்டுகள் போல விண்வெளிக்கு அனுப்புவதா என்று விமர்சித்தனர். ஆனால் இன்று தனியார் துறையினர் செவ்வாய் கிரகம் வரை சிவிலியன்களை அழைத்துப்போக துணிந்திருக்கின்றனர்.
ஹோலோகிராம் டி.வி. வந்துவிட்டது:
ஹாலிவுட்டில், 1977ல் வெளிவந்த ஸ்டார்வார்ஸ் படத்தில் முதல் முதலாக காட்டப்பட்ட அந்த ஹோலோகிராம் காட்சி மிகவும் பிரபலம். ஆனால், நடைமுறையில் திரைக்கு வெளியே உருவம் எட்டிப் பார்க்கும் சாதனம் இதுவரை சாத்தியப்படவில்லை. ( லேசர் மூலம் ஹோலோகிராம் சாத்தியமாகிவிட்டது என்பது வேறு விஷயம்). ஆனால், சமீபத்தில், ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கிராபீன் என்ற அற்புத பொருளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட நிலையில், முப்பரிமாண ஹோலோகிராமை சோதனை அளவில் வெற்றிகரமாக சாதித்திருக்கின்றனர். கிரிப்பித் பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆய்யவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது. இவர்கள் பயன்படுத்தியது 1940களில் டென்னிஸ் கேபோர் என்ற ஆராய்ச்சியாளர் உருவாக்கிய ஹோலோகிராம் முறையைத்தான். இதற்காக 1971ல் கோபோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஆஸ்திரேலியர்கள் உருவாக்கிய கிராபீன் 3டி திரை அதிக அடர்த்தியானது என்பதுடன் 52 பாகை கோணத்திற்குள் எங்கிருந்து பார்த்தாலும் திரைக்கு வெளியே உருவம் நீட்டிக்கொண்டிருப்பது தெரியும். ஆம். பிற 3 டி தொழில்நுட்பங்களைப்போல் இதற்கு விஷேஷ கண்ணாடி அணியவேண்டியதில்லை என்பதுதான் முக்கியமான அம்சம். . இப்போதைக்கு, 1 செ.மீ. அளவுக்கே ஹோலோகிராம் வெளியே நீட்டிக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஆனால், இது ஆரம்பம்தான். இன்னும் இதை மேம்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் , நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>