/* ]]> */
Feb 132011
 

ரஜினி சிரஞசீவி

அசெம்பிளி   எலெக்ஷன்   ‘ மே’  யில்   வரப்  போகுது  .  யாரு ம்  இன்னு ம்  ரெடியாகலைங்க..  ஜனங்க  தான்  கிடந்து  அடிச்சிக்கிறாங்க.  யாரு  யார்  பக்கம்னு  ஒண்ணும்  புடிபட  மாட்டேங்குதுங்க! நம்ம  குனுக்கம்மா  என்ன  சொல்றாங்கன்னு  கேளுங்களேன்.  பலிக்கிதான்னு  பாருங்களேன்!

ஆட்சியில  இருக்குறவங்க  ரொம்ப  தெம்பாத்தான்  இருந்தாங்க.  நலத்   திட்டங்களை    வாரி  வாரி  வழங்கியிருந்தாங்க . ஆனா ,  இந்த  2ஜி  வந்தாலும்  வந்துதுங்க.   எல்லோரும்   வயிற்றில்   நெருப்பைக்  கட்டிக்கிட்டிருக்காங்க.  கூட்டணியும்  முடிந்தபாடில்லை  .இப்போதைக்கு,  காங்கிரஸ்  என்ன  வேணும்னாலும்  செய்யும்  என்ற  பயமுறுத்தல   வேறு.    முன்பெல்லாம்  அம்மையார்  ராசியாத்தான்  இருந்தாங்க.  பிள்ளையின் போக்கு  பயமுறுத்துது.   ஆட்சியில்  பங்கு  கேக்குறாங்களே.  இல்லேன்னா  மூணாவது  அணீயாம்.

மூணாவது அணிக்கு    தே. மு. தி. க. வைச்   சேர்ததுக்கொண்டு  காங்கிரஸ்  போய்விடக் கூடிய  வாய்ப்பையும்  தள்ளிவிடுவதற்கில்லை.

ஆந்திராவில்  கட்சியைக்  கலைத்துவிட்டு   காங்கிரஸில்  சேர்ந்த   நடிகர்   சிரஞ்சீவி  தமிழ் நாட்டு  ரஜினிகாந்த்தையும்   தன்னோடு  காங்கிரசுக்கு  இழுக்கிறாராம்.   இருவரும் சேர்ந்து திரையுலகில் கலககியபோது பிசனஸ் பார்ட்னகளாக படம் எடுத்திருக்கிறார்கள். “மாப்பிள்ளை” படத்தை தமிழில் சிரஞ்சீவி தயாரிக்க அதன் தெலுங்கு பதிப்பை ரஜினி தயாரிக்க இப்படி அந்த நாளிலேயே ரஜினிக்கும் சிரஞ்சீவிக்கும் அண்டர்ஸ்டாண்டிங் நிறைய.  சிரஞ்சீவி தன் மகனை சினிமாவில் அறிமுகப் படத்தும்போது அதன் லான்ச் விழாவை தலைமை ஏற்று நடத்தியது ரஜினிதான். அதேபோல் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கிய போது ” தனிக்கட்சி வேண்டாம் ! காங்கிரசில் சேருங்கள் !” என்று சொன்னதும் ரஜினிதான். இப்போது சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்தும் அவருக்கு ஃபோனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ரஜினி. அப்போதுதான் சிரஞ்சீவி இந்த கொக்கியை போட்டிருக்கிறார்….இது மட்டும்  நடந்துவிட்டால்,  கட்டாயம்  மூணாவது  அணிதாங்க!  அனால்  மனுஷர்  மாட்டுவாரா?  கழுவுன  மீன்ல  நழுவுன  மீனாச்சுங்களே.   அப்ப  பாத்து  படப்பிடிப்புக்கு  வெளி  நாடு  போயிட  மாட்டாரா?

எதிர் கட்சிக்காரங்கதாங்க  கொஞ்சம்  தெம்பா இருக்காங்க!   2ஜி  அவுங்களுக்குத்தான்  கை கொடுக்குமாம்.   கூட்டணிக்கு  யார்  வந்தாலும்  வரலேன்னாலும்  கவலை  இல்லையாம்.   கம்யூனிஸ்டுங்க  வந்துட்டாங்க.  ம.தி. மு.க.  தான்  நிலையான  அலையன்ஸ்  பார்ட்னர்  இருக்காருங்களே!

தேர்தல்  வந்தாலே  எல்லோருக்கும்  கடைசி  நிமிடம்வரை  ஸஸ்பென்ஸ்  கொடுக்க  இருக்கவே இருக்காருங்க. நம்ம  பா. ம. க..  எங்க  போவாரு;  என்ன  பண்ணுவாரு;  திகில்  திருப்பங்களை  தாராளமா  எதிர்பார்க்கலாம்.  மத்ததையாவது  ‘கெஸ்’  பண்ணலாம்.  பா. ம. க.  கிட்ட  மட்டும்  அந்த  பாச்சாவெல்லாம்   பலிக்காது.

” குனுக்கம்மா”  என்னவோ  ஆருடம்   சொல்லப் போறீங்கன்னு  பார்த்தா  பட்டும்  படாம  சொல்லிட்டுப்  போறீங்களே!    ”சொல்றேன், சொல்றேன்”   அடுத்த வாரம்    விடுகதை  விடுபடப்  போகும்  நேரம்  வருது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>