/* ]]> */
Jul 042018
 

தேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி?

coconut milk masaala

தேவை:

கத்தரிக்காய்- கால் கிலோ; பெரிய வெங்காயம்-3; பச்சை மிளகாய்-2; தேங்காய்ப் பால்- கால் தம்ளர்; கடுகு-அரை தேக்கரண்டி; கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு.

அரைக்க:

மிளகு-3 தேகக்ரணடி; பூண்டு-5 பல்; ஜீரகம்-1 தேக்கரண்டி.

செய்முறை:

கத்தரிக்காயைக் கழுவி, நீளவாக்கிலும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது, 1 டம்ளர் நீர் சேர்த்துக் கிளறி கொதிக்கவிட்டு தேங்காய்ப் பால் கலந்து  கிரேவி பதம் வந்ததும், கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்,

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>