/* ]]> */
Nov 232011
 

sandy allen
1.உலகப் பெண்மணிகளிலேயே , உயரத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ‘ஷேண்டி அலன்’ என்பவர். 1976ல் கின்னஸில் இடம் பெற்ற இவரது உயரம் 7.7அடிகள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் வளர்ந்துகொண்டே இருந்த இவர் தன்னுடைய 20 வது வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டதின் மூலம் தான் வளர்வதை நிறுத்திக் கொண்டார். அந்த அறுவை சிகிச்சை மட்டும் இல்லாமல் இருந்தால், கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இவரது உயரம் எல்லையைத் தாண்டியிருக்கும்.
2. மேலே கூறிப்பிட்ட செய்திக்கு முற்றிலும் மாறாக ,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்டங்கி மாகாணத்தில் வாழும் ‘ஸ்டேஸி ஹெரால்ட் ‘ என்பவர் மிகக் குள்ளமானவர். இவரது உயரம் 2 அடி 4 அங்குலம்தான். இவர் கர்ப்பமாகக் கூடாது, என்பது டாக்டர்களின் அறிவுரை. அப்படியிருந்தும், இவர்மீது இரக்கப்பட்டு இவரை ஒரு நல்ல மனிதர் திருமணம் செய்துகொண்டார். இவர் நான் ஒரு தாயாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, கர்ப்பமானார். ஆனால், எல்லோரும் ஆச்சரியப்பபடும்படி டாக்டர்களின் கணிப்புக்கு மாறாக, 2 ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றதோடு,இப்போது 3ம் முறையும் கர்ப்பமாகி இருக்கிறார். கடவுள் கருணையே வடிவானவர்.
3. மறுபடியும் உயரம் பற்றிய செய்திதான். உலகின் உயரமான மனிதர்கள் யார் தெரியுமா? நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்கள் எனப்படுவோர். இவர்களின் சராசரி உயரமே 7 அடிமுதல் 7அடி 6 அங்குலமாகும். அதனால், 6 அடி நிலம்தான் அனைவருக்குமே சொந்தம் என்பது இவர்களுக்குப் பொருந்தாது. இந்த நாட்டில் எல்லா கட்டடங்களும் வீடுகள் , கடைகள் முதலிய அனைத்து இடங்களிலும் வாயில் கதவுகள், 8 அடிக்கு மேல்தான் கட்டப்படுகின்றன.
4. இதுவும் உயரத்தையும் உருவத்தையும் பற்றியதுதான். ஆனால், மனிதர்களைப் பற்றியதல்ல. மனிதனுக்காக’ மாடாய் உழைக்கும் ‘ என்பார்களே அப்படிப்பட்ட மாட்டைப் பற்றியது. சில்லி என்னும் பெயரைக்கொண்ட இந்தக் காளைமாடு கின்னஸில் இடம் பெற்ற உலகிலேயே பெரிய காளைமாடு. இதன் எடை 1.25 டன்னாகும். உயரம் 6.5 இஞ்ச் கொண்டது. இந்த காளைமாடு 6 நாள் குட்டியாக இருக்கும்போது இதன் வளர்ச்சியைப் பார்த்துப் பயந்த ஓனர், இதனை இங்கிலாந்தில் உள்ள ஃபெர்னி என்ற மிருகக் காப்பகத்தில் விட்டு விட்டார் ஆனால், இது மாமூல் மாடுகளைக் காட்டிலும் குறைவாகவே உணவு உண்கிறது. உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமில்லாமல் அப்படி ஒரு சாதுவாம். அனைவருடனும் நட்புடன் பழகி வருகிறதாம்.
5. கரோனா தீவுக் கூட்டங்களுள் ஒன்றான ‘யாப்’ தீவில் புழங்கும் நாணயங்களின் விட்டம் 12 அடிகள்! நாணயங்களை வீட்டுக்கு வெளியேதான் அடுக்கி வைப்பார்களாம்.
6. பொதுவாக நாம் பேசும்போது ஓவராகப் பேசுபவர்களைப் பார்த்து ”உனக்கு வாய் ரொம்ப நீளண்டா”என்று கூறுவோம். ஆனால் உண்மையிலேயே உலகின் அதிக வாய் நீளத்துக்காக ஒருவர் கின்னஸ் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார். இவரின் பெயர்கூட நீளம்தான். ‘ஃப்ரான்சிஸ்ஸோ டொமிங்கோ ஜோக்யும்’ என்ற இவர் அங்கோலோ நாட்டைச் சேர்ந்தவர். இவரது வாயின் அகலம் 17செ.மீ. அதாவது, 6.69 இஞ்ச் அதாவது 1/2 அடிக்கு மேலேயே இருந்தது.
********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>