/* ]]> */
Nov 092011
 

நம் இதயம் ஒரு நாளில் 1,00,000 தடவை துடிக்கிறது.

நம் இதயம் 24,000 லிட்டர் ரத்தத்தை ஒரு நாளில் பம்ப் செய்கிறது.

ஒவ்வொரு நாளும், ரத்தமானது நம் உடம்பில் 19000km பயனிக்கிறது.[the heart circulates the blood 19000 km everyday.]

2015 -ல் ,ஹார்ட் அட்டாக் தான்,இந்தியாவில் மிகப் பெரிய ஆட்கொள்ளி நோயாக இருக்கும்.

உலகளவில் உள்ள இதய நோயாளிகளில் 60 % இந்தியர்கள்.

என்ன பயமா இருக்கா ?ஹார்ட் அட்டாக்குக்கு என்ன அறிகுறின்னு இப்ப பார்ப்போம்.

எல்லா ஹார்ட் அட்டாக்கும் சினிமா,டிவில காண்பிக்கிற மாதிரி ,பயங்கிற வலியோட நெஞ்ச புடிச்சிக்கிட்டு சாஞ்சு ,டக்குனு செத்து போய்டுவாங்களே ,அது மாதிரி வராது.முக்கால் வாசி ஹார்ட் அட்டாக் மெதுவா தான் ஆரம்பிக்கும்.லேசான வலியுடனோ அல்லது நெஞ்சில் அசௌகரியத்துடனோ [discomfort] தான் ஆரம்பிக்கும்.

நெஞ்சில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம் மார்புக்கு நடுவில் ஏற்படும்.நெஞ்சை பிசைவது போலவும்,கடுமையாக அமுக்குவது போலவும் வலிக்கும்.சமையத்தில் விட்டுவிட்டு வரும்.

இந்த அசௌகரியம் மற்றும் வலி நம் உடம்பின் மேற்பகுதி,குறிப்பாக கைகளில்,ஒரு கையிலோ அல்லது சமயங்களில் இரண்டு கைகளிலும்,முதுகு ,கழுத்து,தாடை பகுதிகளிலும் வலி இருக்கும்.

நெஞ்சுவலியுடன் கூடிய மூச்சுத் திணறல் ஏற்படும். ஒருசிலருக்கு நெஞ்சு வலிப்பதற்கு முன்பே மூச்சுத் திணறல் ஏற்படும்.

தலைசுற்றுவது,மயக்கம்,கடுமையான வயிற்று வலி,பயங்கர வியர்வை போன்றவை பிற அறிகுறிகளாகும்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ ஏற்பட்டால் உடனடியாக 108 என்ற எண்ணுக்கு தொலை பேசினால் உங்களுக்கு உதவி உடனடியாக கிடைக்கும்.இந்த சமயத்தை” GOLDEN HOUR “என்று கூறுவர்.ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட 15 நிமிடத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட வேண்டும்.ஒரு மணிநேரத்திற்குள் தகுந்த உதவி கிடைத்து,சிகிச்சை ஆரம்பித்துவிட்டால் அந்த சிகிச்சை பலனளிக்கும்.

தொகுப்பு:diet-b

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>