காசினி கீரை – மருத்துவ நன்மைகள் -
ஹெல்த் டிப்ஸ்
காசினிக்கீரை-பெயரே புதுசா இருக்கா ?வாருங்கள் காசினியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.இக்கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியமாகும்..மலைப்பிரதேசம்,குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல்,ஏற்காடு,சேர்வராயன் மலைப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.மேலும் நல்ல குளிர்ச்சியான தோப்புப் பகுதிகளிலும் இக்கீரையை பயிரிடலாம்.காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் “சிக்கோரியம் இன்டிபஸ்”[Chicorium intybus]என்பதாகும்.என்ன கண்டுபிடிச்சாச்சா?காபி பொடியில் கலப்போமே சிக்கரி,இச்செடியில் இருந்து தான் எடுக்கப் படுகிறது.
மருத்துவ பயங்கள்:
சிக்கரி காபியின் சுவையையும்,நிறத்தையும் கூட்டுவதற்கு அதிக அளவு பயன்படுகிறது.கசாயமானது கருமையான கசப்பான சுவையோடு இருக்கும்.இதை உட்கொள்வதால் உணவுப் பாதைக்கு நன்மை பயக்கும் காசினியிலுள்ள பிரிபையாரிக் பொருட்களான இனுவின்,ஒலிகோ பிரக்டோஸ் ஆகியவை இயற்கையான நார்ச்சத்துக்களாக கருதப் படுகின்றன.இவை சிறுகுடலில் ஜீரணிக்கப் படுவதில்லை.ஆனால் பெருங்குடலில் நொதிக்கப்படுகின்றன.இதனால் உண்டாகும் லேக்டேட்,குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லோப்டோ பேசில்லஸ்,பிஃபிடோபேக்டீரியம் போன்றவற்றின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.இதனால் உணவு செரித்தல் அதிகரிக்கின்றது.நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கின்றது.தீங்கிழைக்கும் கொழுப்புச் சத்தினைக்[bad cholesterol] குறைத்து நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கின்றது.
சிக்கரியில் வேதிப் பொருட்களான சிக்கோரின்,கோலின்,டானின்,சிக்கோனிக் அமிலம்,அமினேட் அமிலம்,தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமிங்களான ஏ,சி,கே அதிக அளவில் உள்ளதால் பசியைத் தூண்டவும்,சோர்வை அகற்றவும்,நினைவுத் திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
நன்றி:
வளரும் வேளாண்மையில் வந்த ,.”களைப்பைப் போக்கும் ‘காசினி’ என்ற கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
தொகுப்பு:diet-b.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments















Please comment with your real name using good manners.