/* ]]> */
Jul 252011
 

தெய்வதிருமகள் – திருட்டு தேவதை

       முதலில் தெய்வமகன் பிறகு பெயர் மாற்றி தெய்வதிருமகன் பின்னர் சர்ச்சைக்கு பயந்து கடைசியில் “தெய்வதிருமகள்” என்று பெயர் குழப்பங்களை தாண்டி வெளிவந்திருக்கும் படம் “தெயய்வதிருமகள்” – பெயரில் தான் குழப்பமே தவிர i am samஎன்ற ஆங்கில படத்தின் கதையை திருடியதில் எந்த குழப்பமுமில்லை..
       ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் மனதை பறி கொடுத்து விட்டு அவள் பின்னாலேயே சுற்றி சுற்றி கடைசியில் அவள் ஒரு விபச்சாரி என தெரியவரும் போது என்ன மனநிலையில் இருப்போமோ அதே மனநிலை தான் “தெயய்வதிருமகள்” ஏற்படுத்திய அனுபவமும்…சிலாகித்துஎழுதியிருக்க வேண்டிய இந்த பதிவு சிதைந்ததன் காரணம் தெய்வதிருமகள் i am சாம் ன் அப்பட்டமான தழுவல் என்பதே…
       அன்போடும்,பாசத்தோடும் பின்னிப் பிணைந்த இரண்டு சிறார்களை பிரித்தால் என்னவாகும் என்பதே கதை..இதில் உடலால் இளைஞனாக இருந்தாலும் மூளை வளர்ச்சியில் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்
அப்பா கிருஷ்ணாவாக விக்ரம் , அவனின் ஐந்து வயது மகள்நிலாவாக சாரா..விக்ரமிடம் இருந்து நிலாவை பிரிக்கிறார் அவள் தாத்தா..சட்டப்படி நிலாவை விகரமிடம் ஒப்படைக்க பாடுபடுகிறார்கள் வக்கீல்கள் அனுஷ்காவும் , சந்தானமும்..கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்..
          திருடியதை தவிர்த்து விட்டு பார்த்தால் இது தமிழ்நாட்டிற்கு புதுக் கதை..விக்ரம் – சாரா இவர்களது நடிப்பில் மற்ற குற்றங்கள் மறக்கப்படுகின்றன .. இவர்களின் உடல்மொழியும், நடிப்பும்அவ்வளவு அற்புதம்..காலங்கள் கடந்தாலும் நிலாவாக நடித்த சாராவின் நடிப்பு ஒழி வீசும்..இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவறும் வழக்கமான கவர்ச்சி நடிகையாகி விடக் கூடாதென்பது இப்போதே வைக்கும் வேண்டுகோள்..
             விக்ரம் நடிப்பிற்கு இப்படம் ஒரு மைல்கல்…கமலிற்கு பிறகு தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..கொஞ்சம் பிசகினாலும் “ஓவர் ஆக்டிங்” ஆகி விடக்கூடிய அபாயத்தை உணர்ந்து மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்…மகள் பிறந்தவுடன் முகத்தில் சந்தோசத்தையும்,மனைவி இறந்ததை அறிந்தவுடன் சோகத்தையும் வேறுபடுத்தி காட்டும் இடம் ஒரு உதாரணம்…பட ஆரம்பம் முதல்
இறுதி வரை நிலா,நிலா என்று சொல்லி எல்லோரையும் உருக வைத்துவிடுகிறார்..
        அனுஷ்கா,அமலா பால் இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறார்கள்..அளவாக நடித்திருக்கிறார்கள்..சந்தானம் சிரிக்க வைப்பதோடு சீரியசான ரோலிலும் நடித்திருக்கிறார்..பாவம்கார்த்திக் குமாரை வீணடித்திருக்க   வேண்டாம்….நாசர்,எம்.எஸ்.பாஸ்கர்,ஓய.ஜி.மகேந்திரா இப்படி சீனியர் நடிகர்கள் படத்தில் நிறைந்திருக்கிறார்கள்…படத்தில் சிலாகிக்க வைக்கும் காட்சிகளும் உண்டு ..சினிமாத்தனங்களும்உண்டு….
       பாதி வழியில் இறக்கி விடப்பட்டு நிலாவை தேடி விக்ரம் அலையும் காட்சிகள் , பிரிந்திருக்கும் தருணத்தில் இருவரும் நிலவைப் பார்த்து பேசும் காட்சி , விக்ரமுடன் நிலா சேர்வாரா என்று பதைபதைக்க
வைக்கும் கோர்ட் காட்சிகள் , நாசர் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க நிலா-விக்ரம் இருவரும் சைகையில் குழந்தைத்தனமாக பேசிக்கொள்ளும் காட்சி , கடைசியில்கிளைமாக்ஸ் இவை எல்லாமே சிலாகிக்க வைத்த காட்சிகள்..
     எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியுடன் விக்ரமை இணைத்து பேசும் காட்சிகள் , பொம்மைகள் போல விக்ரமின் மனநிலை குன்றிய நண்பர்கள் உலா வரும் காட்சிகள் , மழை பெய்தவுடன் அனுஷ்கா விக்ரமை காதலிப்பது  போல வரும் தேவையற்ற பாடல் காட்சி, நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் விக்ரம் ஓடிச்சென்று மருந்து வாங்கி வரும் காட்சி , அனுஷ்கா,ஒய்.ஜி சம்பந்தப்பட்ட காட்சிகள்  இவையெல்லாம்சினிமாத்தனமான காட்சிகள்…
          மிக மெதுவாக நகரும் முதல் பாதியை கோர்ட் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி சமன் செய்கிறது…
ஜி.வி.பிரகாசின் இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் மனதில் நிற்பவை…
     கிரீடம் , பொய் சொல்ல போறோம் இரண்டும் ரீ மேக் படங்கள் என்றாலும் நேர்த்தியாக எடுத்திருப்பார்விஜய்…மதராசப்பட்டினம் டைட்டானிக் படத்தின் சாயலாய் தெரிந்தாலும் நிச்சயம் கதைக்களமும் , திரைக்கதையும் இரண்டு படங்களையும் அழகாக வித்தியாசப்படுத்திக் காட்டியது…இது விஜயின் புத்திசாலித்தனம்..ஆனால் இந்தப் படத்தை அப்பட்டமாக தழுவி விட்டு “எழுத்து – இயக்கம் ” என்று
போட்டுக் கொண்டது விஜயின் மொள்ளமாரித்தனம்…
    பிக் பாக்கெட் , வழிப்பறி இதையெல்லாம் செய்யும் திருடனை பொடனியிலே தட்டும் போலீஸ் பல கோடி ஊழல்செய்பவர்களுக்கு விருந்து உபச்சாரம் செய்வது வழக்கம்..இதைப் போலத்தான் இருந்தது சினிமா விமர்சனங்களுக்கு பெயர் போன “ஆனந்த விகடன்” இந்த படத்திற்கு கொடுத்த ஐம்பது மார்க்குகளும்..
     தியேட்டருக்கு சென்று தான் படம் பார்க்க வேண்டும் என்ற கொள்கையுடைய என்னைப் போன்ற பலரின் நெஞ்சங்களைதிருட்டு வி.சி.டி யை விட மோசமான இது போன்ற கதை திருட்டுக்கள் பதைபதைக்க வைக்கின்றன…இயக்குனர்களே முதலில் இதை சரி செய்து விட்டு பிறகு “திருட்டு வி.சி.டி யில் படம் பார்க்காதீர்கள்” என்று அறைகூவல் விடுங்கள்…திவ்ய தரிசனமாக இருந்திருக்க வேண்டிய தெய்வதிருமகள் ஒருதிருட்டு தேவதையாக மாறியது சோகக்கதை…
என்.அனந்து
N.Ananthu
Vanga blogalam

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>