Jul 262016
தூக்கமின்மை:
- ஒரு சில ஒழுங்கு முறைகளை தினசரி வாழ்க்கையில் கடைப் பிடித்தாலே தூக்கமின்மையை எளிதாஅக் சரி செய்து விடலம். முதலில், தினமும் இரவில் தூங்கப் போகும் நேரத்தையும், காலையில் எழுந்திருக்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ளவேண்டும். அதாவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழகவேண்டும். தினமும் இரவு 10 மணிக்கு தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்றால், இந்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். என்றாவது ஒரு நாள் சினிமா, ஷாப்பிங், ரிஷப்ஷன் என்று போய்விட்டு வந்ததால், படுக்கப்ப் போகும் நேரம் தவறினால், பரவாயில்லை. இந்த ஒழுங்கு முறையை ஆரோக்கியமன தூக்கம் (sleep hygene) என்று சொல்வோம் .
- எபப்டி உடம்பிற்கு சுகாதாரம் முக்கியமோ அப்படி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான தூக்கமும் முக்கியம்.
- அடுத்தது தூங்கும் அறையில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது உங்கள் வசதிக்கேற்ப இருக்கவேண்டும். வெறும் படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது. அறையின் வெளிச்சம், போர்வை, தலையணையின் நிறம், வெப்பம் என்று அனைத்தும் உங்கள் மனதிற்குப் பிடித்தமாதிரி இருக்கவேண்டியது அவசியம்.
- அடுத்து, நடைப் பயிற்சி . எந்த நேரத்தில் நடந்தாலும் உடலுக்கு நல்லதுதான். இருந்தாலும், தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், காலை நேரத்தில் சுறுசுறுப்பாக தினமும் 45 நிமிடங்கள் நடப்பது அவசியம்.
- காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.தவிர்க்கவே முடியாது என்றால், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் குடிக்கலாம். அதுபோல புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதையும் அறவே விட்டுவிட முயற்சி செய்யுங்கள்.
- காலையில் குளித்தாலும், மாலையில் 6 முதல் 7 மணிக்குள் இன்னொரு முறை குளிப்பது தூக்கமின்மையைப் போக்க உதவும்.
- தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.
- தூங்குவதற்கு முன் இளஞ்சூடாக பால் குடிக்கலாம். வாழைப் பழம் சாப்பிடலாம்.
- வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், அதையே நினைத்துக் கொண்டிராமல், அதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்தமான வேறு வேலைகளைச் செய்யலாம்.
- எல்லாவற்றையும் விட முக்கியம்,உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுடன் செலவு செய்வது, மனதை எப்போதும் ரிலாக்ஸாக, மனஅழுத்தம் இல்லாமல் வைத்துக்கொள்ள உதவும். யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும்.
- இந்த ஒழுங்கு முறைகளை தொடர்ந்து 2 வாரங்கள் முறையாக பின்பற்றுங்கள். அதன் பிறகும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது என்றால், கண்டிப்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments