/* ]]> */
Jan 292018
 

துரித உணவு உடலுக்குத் தீங்கு:

FAST FOOD

 

துரித உணவு என்பது பல்வேறு வேதிப் பொருட்கள் , உப்பு போன்றவற்றைக் கூடுதலாகச் சேர்த்து, வெறும் கார்போஹைட்ரேட் மாவுச் சத்து செறிவாக உள்ள, பதப்படுத்தி வைக்கப்பட்ட உணவை விரைவாகச் சமைத்துத் தரும் உணவுகளையே குறிக்கும்.

அதுபோல காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் கூடுதல் சர்க்கரை சத்து கொண்டவை. ஒருதடவை இந்த உணவுகளை உண்டால், நோய் வந்துவிடும் என்பதல்ல. இந்த வகை உணவை அன்றாடம் உண்டு வந்தால்,வெறும் மாவுச் சத்து உடலில் கொழுப்பாக மாறி நம்மை ஊளைச் சதையர்களாக மாற்றிவிடும். மேலும் கூடுதல் உப்பு முதலிய பொருட்கள், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். சரிவிகித சத்துக்களைத் தருவதில்லை என்பதால், பல்வேறு சத்துக் குறைபாட்டு நோய்களைத் தோற்றுவிக்கும்.

பீட்ஷா, நூடுல்ஸ், போன்றவை எல்லாம் துரித உணவு என பலரும் கருதுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய உணவு நூடுல்ஸ்தான். எனவே நூடுல்ஸ் பிரச்சினை இல்லை. அந்த நூடுல்ஸ் வெறும் மாவுச் சத்து கொண்டதா இல்லை முழு தானியத்தால் ஆக்கப்பட்டு , போதுமான நார்ச் சத்து இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>