உஜ்ஜையினி கால பைரவர் கோவில் மிகப் பிரசித்தமான ஒன்று! ஆனால் அந்தக் கோவிலின் கடவுளுக்குப் படைக்கப்படும் தீர்த்தப் பிரசாதம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்!
குடும்பமாக வந்து பாட்டில் பாட்டிலாக மது வகைகளைப் படைக்கிறார்கள்! அதோடு விடாமல் தட்டுகளில் மதுவை ஊற்றி, பைரவருக்குப் படைக்க அவரும் அதை உறிஞ்சி அருந்துவது போல தெரிகிறது!!! பிள்ளையார் பால் அருந்தியதே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது! கால பைரவரின் இந்த சமாச்சாரம் யாருக்கும் இது வரை தெரியாமல் போனது எப்படி?
அதை எல்லாம் விட பெரிய வேடிக்கை..”பைரவருக்குப் படைத்தது போக மீதம் உள்ள மதுவை வீட்டிற்கு எடுத்துச் சென்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அருந்துவோம்” என்று கோவிலில் பேட்டியின் போது ஒரு பெண் சொன்னது தான்!!!
எங்கே செல்லும் இந்தப் பாதை???
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments