/* ]]> */
Oct 232011
 

தீபாவளி மலர்

மூன்றாம் கோணம் தீபாவளி மலர் வெளி வந்து விட்டது ! படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள் !

தொடங்கி இன்னும் இரண்டு வருடம் கூட ஆகவில்லை.. அதற்குள் இந்த அகலக்கால் தேவையா?  என்ற சுய சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினோம். எல்லாம் முடிந்து இறுதி பிரதி பார்க்கும்போது அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தீபாவளி மலரென்றால் அது இணைய தளங்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக இருக்க வேண்டும். அச்சுப் பத்திரிக்கைகளுக்களின் தீபாவளி மலர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என நினைத்தோம். தீபாவளி மலரென்றதும் ஃபோக்ஸ்டாக இது இது இவர்கள் தான் எழுத வேண்டும் என மூன்றாம் கோண எழுத்தாளர்களளும் மற்ற இணைய தள எழுத்தாளர்களும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு எழுதியதில், என்னைப் பொறுத்தவரை முத்தான பதிமூன்று பதிவுகளை தந்திருக்கிறோம். ஆமாம், பதின்மூன்றே பதிவுகள் தாம் ! ஆனால் எங்களால் இயன்றவரை அதில் சினிமா, நகைச்சுவை, சிறுகதை, கவிதை, ஷாப்பிங், ஆன்மீகம், மருத்துவ மற்றும் இலக்கிய நேர்காணல் என பல விஷயங்களைத் தந்திருக்கிறோம் .

ராகவன், சிபி.செந்தில்குமார், அனந்து, குறும்பு குப்பு, அபி, டயட் பானு, ராஜேஸ்வரி, பீப்பீ,ஸ்வாதி, ஷஹி , மாதங்கி என வித்தியாசமான களங்களில் எழுத்துத்திறன் காட்ட, குழந்தைகள் அனஸ்தடிஸ்ட் மருத்துவர் முத்துகிருஷ்ணனின் பேட்டி பல புது விபரங்களை நம் வாசகர்களுக்கு அளிக்க,

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தமிழக முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரனின் மனம் திறந்த பேட்டி மூன்றாம் கோணம் தீபாவளி மலருக்கே அழகு சேர்க்கிறது !

பதிமூன்று பதிவுகளுக்கும் தனித்தனியாக அணிந்துரை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.. அதில் ஒவ்வொரு பதிவையும் அதன் சிறப்பையும் எழுதுகிறோம்!

தீபாவளி மலர் வெளியிடும் அளவுக்கு நாங்கள் வளரக் காரணமாயிருந்த வாசகர்களுக்கு நான் நன்றி கூறி விடை பெறும் முன்னால் ….

இந்த தீபாவளி மலர் நம் சப் எடிட்டட் ஷஹி இல்லையென்றால் சாத்தியமாகியிருக்காது… இன்னும் சொல்லப் போனால், மூன்றாம் கோணம் பத்திரிக்கைக்கு நான் ஆசிரியரே தவிர, இந்த தீபாவளி மலரைப் பொறுத்த வரை இது ஷஹியின் அயராத உழைப்பிற்கு சாட்சி !

மீண்டும் நவமப்ர் ஆறாம் தேதி நடக்க இருக்கும் எங்கள் இணைய எழுத்தாளர் சந்திப்புக்கு உங்களை வரவேற்று

இணைய இதழ்களும் அச்சு இதழ்களுக்கு சளைத்தவை அல்ல என சொல்லும் இந்தப் புது முயற்சிக்கு உங்கள் ஆதரவை நாடும்

மூண்றாம் கோணம் ஆசிரியர்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>