/* ]]> */
Mar 132018
 

தீக் காயங்களால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? தீ விபத்தில் எத்தனை சதவிகிதம் காயம் அடைந்திருந்தால், காப்பாற்றலாம்?

FIRE BURNS

  1. மேல் தோலில் மட்டும் ஏற்படுவது:

மேல்தோல் கருகி, சிவப்பு நிறமாகி எரிச்சல் ஏற்படும்.தோல் பெருமளவு சிதைந்திருந்தால், அதன் வழியாக நுண்ணுயிரிகள் புகுந்துவிடும் என்பதால், சிலசமயம் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேண்டியிருக்கும்.

  1. இரண்டாம் அடுக்கு தோல் வரை ஏற்படுவது:

ரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மா எனும் திரவம் சேதமடைந்த ரத்தக் குழாய் வழியே கசிந்துவிடும். எனவே ரத்த அழுத்தம் குறையும். சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படலாம். எனவெ உடனடியாக நோயாளிக்கு குளுகோஸ் ஸலைன் , ரத்தப் ப்ளாஸ்மா செலுத்துவது அவசியம்.

  1. தோல் பகுதியைப் பாதித்து, அதன் கீழுள்ள தசைப் பகுதிக்கும் கீழே ஊடுருவிப் பாதிப்பது:

இது மிகவும் ஆபத்தானது. உள் பகுதியில் தீக்காயத்தில் சிதைந்து அழுகிய தசைப் பகுதிகளில் நுண்ணுயிரிகள் வளர்ந்து உடல் முழுவதும் சீழ் பிடித்து உயிரிழப்பு ஏற்படலாம். இதற்கு செயற்கை சருமம் அல்லது வேறு ஒருவரின் தோலை வைத்து மருத்துவம் செய்யவேண்டும்.

தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 30 % பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர்.  80% த்துக்கும் மேல் தீக்காயம் பட்டவர்கள் பிழைப்பது கடினம். 30%க்கும் மேல் 80% க்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் பிழைத்தனர். சிலர் மடிந்தனர் என அறிய முடிகிறது.

வளர்ந்த நாடுகளில் 60% அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் பிழைத்துக்கொண்டனர். எந்தவகை தீக்காயம் , உடலில் எவ்வளவு பரவியுள்ளது , பாதிக்கப்படவரது வயது உடல்நலம் முதலிய தகவல்களைக் கொண்டு , தீ விபத்திலிருந்து பிழைக்கும் வாய்ப்பை அளவிட வழிமுறை உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் தீ விபத்தில் சிக்கிகொள்கின்றனர். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் விதத்தில் தோல் தானம் செய்யலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>