/* ]]> */
Aug 312010
 நம் எல்லோருடைய வீடுகளும் அவசியம் திருக்குறள் ஏடு வைத்திருப்போம்..தெளிவுரைகளும் தான். கலைஞரின் திருக்குறள் உரை வாசித்திருக்கிறீர்களா? மிக மிக எளிமையான நடை,இனிமையான விளக்கம், குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் சீரான ஓட்டம் என சிறப்பான தெளிவுரை. வாசிக்கலாம் வாங்க…

பேராசிரியர் க.அன்பழகனின் அணிந்துரை அருமையாக உள்ளது,அவர் கலைஞரைப் பற்றி பின் வருமாரு புகழ்ந்துரைக்கிரார்..
“தன்மானத் தந்தை பெரியாரின்
உணர்வு காக்கும் மைந்தன்!
இனமான ஏந்தல் அண்ணாவின்
இதயம் நாடிய இளவல்!”
மேலும்…
“பயில்தற்கும் தெளிதற்கும் எளிதாகும் இவ்வேடு,
துயில்நீங்கி எழும் தமிழர்க்கோர் கைவிளக்கு!”
என்றும் கூறுகிறார் இந்நூல் குறித்து.
பதிப்புரையில் பேராசிரியர் நன்னன்,
1.தேவை
2.வழிபாடு
3.பெண் வழிச்சேரல்
4.ஊழ்
5.பல்வகைச் சிறப்புகள்
என்னும் ஐந்து தலைப்புகளில் தெளிவுரை பற்றி பேசுகிறார்.
நூலில் இருந்து ஒரு சில வரிகளைக் காண்போம்.
ஆதி முதல் குறளான….
” அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.” என்ற குறளுக்கு…
” அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன் ,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.”
என்று ஒரு முறை வாசித்தாலே, என்றென்றும் நினைவில் தங்கும் வண்ணம் எளிமையாக உரைத்திருக்கிறார் கலைஞர்.
இதே குறளுக்கு பொதுவாக வழங்கப்பட்டு வரும் உரை,
“எழுத்துக்கள் அகர ஒலியை முதன்மையாகக் கொண்டிருப்பது போல் உலகமும் இறைவனை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்பது.”
” ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.”…… என்னும் நீத்தார் பெருமை குறளுக்கு,
“புலன் களை அடக்க முடியாமல் வழிதவறிச்சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி ,ஐம்புலங்களால் ஏர்ப்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டகவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.”… என்று ந்றுக்கென்று உரைக்கிறார் கலைஞர்.
‘சிற்றினம் சேராமை’ தலைப்பின் கீழ்,
“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.”…. என்பதற்கு
” ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும் “….என்று அழகாக இயம்புகிறார்.
‘குறிப்பறிதல்’ தலைப்பில்….
” ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.”…என்ற குறளுக்கு
“காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துகொள்வர்.”என்று கலைஞர் சொல்லும்போது நம் இதழோரத்தில் துளிர்க்கும் புன்னகைக்கு அவரே காரணம்.மேலும் …..
‘உறுப்புநலன் அழிதல்‘ தலைப்பில்
” பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து “என்பதற்கு,
“நெஞ்சே! இரக்கமற்று என்னைப்பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?” என்று படிக்கும் போது நம் நெஞ்சும் அல்லவா தலைவியினதோடு சேர்ந்து வாடுகிறது?
இவ்வாறாக இனிமையான உரையாகவிருக்கும் கலைஞர் உரையை நன்னன் அவர்கள்;
“இக்காலத்தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத்தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளர்ந்து ,தெற்றெனக் காட்டுவதையே கலைஞர் தம் உத்தியாகக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.பரிமேலழகர் முதலிய பழைய உரைகாரர்களும் திரு.வி.க.,புரட்ச்சிக்கவிஞர், மு.வ.போன்ற புத்துரைகாரர்களுமாகிய உரையாசிரியர் பற்பலருள் கலைஞர் தம் பணியால் தனித்துச் சிறக்கிறார்.”என்று பாராட்டிச் சிறப்பிக்கின்றார்.
……ஷஹி….

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>