தினை பாயசம்-செய்வது எப்படி?:
தினை புரோட்டீன், இரும்புச் சத்து, தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் இல்லாதது. உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்;
தினை-100 கிராம்; நெய்-1 டீ ஸ்பூன்; பால்- 400 மி.லி.; தண்ணீர்-200 மி.லி.; வெல்லம் -150 கிராம்; தேங்காய்ப் பால்-150- மி.லி.; முந்திரி பருப்பு-25 கிராம்; ஏலக்காய்-தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தை அடுப்பிலேற்றி, மிதமான தீயில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, தினையை வறுக்கவும். தினை வாசனை வந்ததும், 300 மிலி. பாலை ஊற்றி, 200 மிலி. தண்ணீரையும் சேர்த்து வேக விடவும். தினை அரிசியைவிட வேகமாக வெந்துவிடும். .எனவே அளவுக்கு மேல் வேகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெல்லத்துடன் 100 கிராம் தண்ணீர் சேர்த்து பாகு செய்து மீதி 100 மிலி. பாலையும் 150 மிலி. தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கி விடவும். தீயை மிதமாக வைத்து அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். வாசனையான தினைப் பாயசம் தயார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments