/* ]]> */
Jul 142013
 

தினப் பலன்- 15.7.13.:

navagrahas
மேஷம்:
தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். பணச் செலவில் சிக்கனம் தேவை. சுத்தமான உணவை உண்ணவும். இன்று உங்களுக்கு சொல்லும் செயலும் வேறுபடும். உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொணடவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்துகொள்வதால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

ரிஷபம்:
தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் சராசரி அளவில்தான இருக்கும். வருமானமும் சுமாராகத்தான் இருக்கும். எனவே சேமிப்பிலிருந்து எடுத்து செலவு செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற விஷயங்களை உங்கள் நணப்ர்களிடம்கூட ,இன்று பேசவேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. சிக்கலாகிவிடும்,.

மிதுனம்:
தொழிலில் வளர்ச்சிப்பணிகள் துரிதமாக நடக்கும். லாபத்துடன், ஏற்கெனவே நின்று போன பணமும் சேர்ந்து வசூலாவதால், பணவரவு நிறைந்த அளவில் இருக்கும். பலநாட்களாக வாங்க விரும்பிய பொருளை வாங்குவீர்கள். இன்று மனதில் ஊக்கமும் உற்சாகமும் குடிகொண்டிருக்கும். பழைய விஷயங்களையும் புதிய விஷயங்களையும் அறிமந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்:
தொழிலில் நீங்கள் நினைத்த இலக்கை எட்டுவீர்கள். உங்கள் கௌரவத்துக்காக தாராளமாக பணம் செலவு செய்வீர்கள். காலக்கெடு தவறிய உணவு உண்பதால் சிலருக்கு உடல் உபாதை தோன்றலாம். நண்பர்கள்கூட உங்களை வேதனைப்படுத்திப் பார்ப்பார்கள். உங்களின் பெருந்தன்மையால் அவற்றை ஒதுக்கிவிடுவீர்கள்.

சிம்மம்:
புதியவர்களின் அன்பும் உதவியும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கொண்டு வருவீர்கள். பணப் பரிவர்த்தனை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் நடை,உடை, பாவனைகளில் வசீகரம் மிளிரும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.

கன்னி:
வருமானத்தைவிட செலவு அதிகமாகும். தொழிலில் லாபம் காணும் நோக்கத்தில் செயல்படவேண்டும். பிறர் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டாம். கையிலிருக்கும் வேலைகளை அவசரமாக முடிக்க நிர்பந்தம் ஏற்படும். உங்கள் பேச்சில் நிதானம் வேண்டும்.

துலாம்:
ஆன்மீக சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பீர்கள். எதிர்பார்த்த அரசு உதவி கிடைக்கும். பணப் பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை பூர்த்திசெய்வீர்கள். இன்று நணப்ர்களுக்கு நீங்கள் முன்னால் செய்த உதவிகளுக்கான பலனைத் திரும்பப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:
தொழிலில் வளர்ச்சிப்பணிகளை திரம்பட நிர்வகிப்பீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இன்று நீதி நேர்மையுடன் செயல்படுவீர்கள். . உறவினர்கள் அன்பு பாசத்துடன் உங்களைத் தேடி வருவார்கள்.

தனுசு:
தொழிலில் கூடுதல் நன்மை உண்டாகும். வளர்ச்சி அதிகரிக்கும். பணவரவில் ஒரு பகுதியை சேமிப்பீர்கள். கீழ் நிலையில் வேலை பார்ப்பவரகளுக்கும் மரியாதை தந்து பழகுவீர்கள். அதனால், தொழிலாளர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். பெண்கள் பண வசதிக்கேற்ப ஆடை அணிகலன் வாங்கி மகிழ்வர்.

மகரம்:
இன்று உடல் ஆரோக்கியம் சிலருக்கு தொல்லை கொடுக்கும் .சிறிய அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஒரு சிலர் உங்களை ஏமாற்ற. முயற்சிக்கலாம். கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். புதிய செலவுகள் வரும். வேலையில் கூடுதல் பொறூப்புணர்ச்சி தேவைப்படும்.

கும்பம்:
இன்று இரவு 5.59 மணிவரை சந்திராஷ்டமம் இருக்கிறது. யாருடனும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள். இன்று உங்கள் நணப்ர் செய்த தவறுக்காக நீங்கள் தண்டனை ஏற்க நேரிடும். நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைமையைச் சரி செய்துகொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி நிலவும். கடன் பெறவும் நேரலாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவு.ம்.

மீனம்:
தொழிலில் இருந்த போட்டி குறையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிறர் நலனுக்காக இன்று உழைப்பீர்கள். முடியாது என்று நினைத்த சில விஷயங்கள் லாபகரமாக முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு அவர்கள் செய்த நற்செயல்களால் புகழ் கூடும்.
$$$$$$$$$$$$$$$

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>