/* ]]> */
Jul 122013
 

தினப் பலன் -13.7.13:

navagrahas

மேஷம்:
இன்று உங்கள் முயற்சிகள் கை கூடும். மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டி, பாராட்டு பெறுவார்கள். பெறுவார்கள். ஒரு வாகனம் வாங்கும் யோகமும் ஏற்கெனவே உள்ள வண்டியின் மூலம் வசதியை அனுபவிக்கும் யோகமும் உண்டாகும்.. உங்கள் பிள்ளைகள் தங்க்ள் கேரியரில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள். உங்களுடைய நெருங்கிய சொந்தக்காரர் உங்கள் மிது கோபித்துக்கொள்வார்.
ரிஷபம்:
உங்கள் முயற்சிகள் கைகூடுவதால், உங்களுக்கு நிறைந்த புகழ் உண்டாகும். இல்லத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். வீடு,வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உங்கள் உடல் ஆரோக்கியம் குறைவதால், மருத்துவச் செலவை மேற்கொள்வீர்கள். உங்கள் வார்த்தைகளில் கோபம் கொப்பளிப்பதால், உங்கள் நண்பர்கள் கோபம் கொண்டு விலகிப் போவார்கள். அதோடு புதிய எதிரிகளும் உருவாவார்கள்.
மிதுனம்:
மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார்கள். உங்கள் இனிமையான பேச்சு யாவரையும் கவரும் வகையில் அமைந்து, பிரிந்து போன நண்பர்களை திரும்ப உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் உங்களை வேதனைப்படுத்தும்.. மனைவியுடன் சுமுக உறவு மிளிர்ந்து, அதன் மூலம் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
கடகம்:
மனதில் குழப்பம் மிகுந்திருக்கும் அதிகம் தேவைப்படாத பொளை வாங்கி வீண் செலவில் ஈடுபடுவீர்கள். மருத்துவச் செலவு உங்கள் வியாதியிலிருந்து விடுதலையளிக்கும் உங்கள் வியாபாரம் அதிக பொருள்வரவைக் கொடுக்காது. உங்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். நோய் குணமாகும். உங்கள் செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்:
புகழேணியில் ஏறும் நாள். கலைப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் வாங்குவீர்கள். தொழில் வியாபாரம சிறந்து விளங்கி நல்ல வருமானத்தைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் ஜொலிப்பார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனாவசியமாக வாதம் புரிய வேண்டாம். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் புத்திரர்கள் உங்கள் மீது பிரியமாக இருப்பார்கள்.
கன்னி:
உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் மீது அன்புடன் நடந்துகொண்டு குடும்ப ஒற்றுமையை சிறக்கச் செய்வார். வாகனத்தின் முழுப்பயனை அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் காணலாம். மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டி முன்னேறுவர். புதிய ஆடல் அணிகலன் வாங்குவீர்கள்.
துலாம்:
யாரையும் எளிதில் நம்பி முக்கியமான விலை மதிப்புள்ள பொருட்களையோ அல்லது முக்கியமான தஸ்தாவேஜுகளையோ ஒப்படைக்க வேண்டாம். சகோதர சகோதரிகளிடமிருந்து உதவி பெற முயல வேண்டாம். தொழில் புரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். இணக்கம் நிலவும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படும். யாரிடமும் கடுமையாகப் பேசவேண்டாம். ஆசிரியர்களும் க்ன்ஸல்டன்ஸி வைத்திருபப்வர்களும் ஏற்றம் பெறுவர்.
விருச்சிகம்:
வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் நிலவி, குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் பார்ட்னர் மூலம் தொல்லை வரலாம். ஆரோக்கியத்தில் முழுமையான அக்கறை காட்டத் தவறினால் பாதிப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்திலிருந்து வருமானம் வரும். மாணவர்கள் கடுமையான முயற்சி எடுக்கத் தயங்கக் கூடாது.
தனுசு:
திருமணமாகாதவர்களுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பெற்றோர் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சில உடல்நல பாதிப்புகள் தோன்றலாம். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர். பூர்வீகச் சொத்து எதிர்பார்த்த மாதிரி கைக்கு வருவதில் இழுபறி நீடிக்கும். உடன் பிறந்தோர் உதவியாகவும் அன்பாகவும் இருப்பார்கள்.
மகரம்:
அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கலிடம் குறை கண்டு பிடிப்பார்கள். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறையும். அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளை உங்கள் பார்ட்னரின் ஒத்துழைப்பினால் சமாளிப்பீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருகும். உடல்நலம் தொல்லை கொடுக்கும். வாகனத்தைச் சரிபண்ணி வைத்துக்கொள்ளாவிட்டால் பாதியில் நின்று போகும்.
கும்பம்:
இன்று இரவு 11.54 முதல் சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. அதிகமாக எதையும் விவாதிக்கவேண்டாம். அதிக பேச்சு, மனைவியின் கோபத்தை அதிகமாக்கி குடும்ப ஒற்றுமையைக் குலைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனக் குறைவு ஏற்படும். வேலை தேடுவோர் காத்திருக்க வேண்டும். நோயிலிருந்து விடுபட மருத்துவ உதவியை நாடுவீர்கள். ஆலயம் சென்று சாதுக்களை தரிசிப்பீர்கள்.எதிரிகள் உங்களை வீழ்த்த சமயம் பார்த்துக் காத்திருப்பர்.
மீனம்:
இன்று உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி தேர்ச்சியை உறுதி செய்வர். நாவடக்கம் தேவை .இல்லையென்றால், உங்கல் பேச்சு பெரிய குழப்பத்டஹி உண்டாக்கும் பிள்ளைகள் உங்கள்மீது பிரியம் காட்டுவர். உங்கள் புத்திமதிகளை மதித்து நடப்பர். உடல்நலத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் பெரிய சங்கடங்களைச் சந்திகக் நேரும்.

^^^^^^^^^^^

( விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள moonramkonamkonam@gmail.com என்ற websiteடுக்கு தொடர்புகொள்ளவும்)

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>