/* ]]> */
Jul 112013
 

தினப் பலன் -12.7.13:

navagrahas

மேஷம்:
புதிய நபர்கள் கேட்டால் நீங்கள், உங்கள் கருத்துக்கள் எதையும் கூறவேண்டாம். நீங்கள் அதிக உழைத்தால் மட்டுமே தொழில், வியாபாரத்தின் பலன்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். நினைத்த நேரத்திலும் நினைத்த அளவிலும் பண வரவு இருக்காது. தாமதப்படும். புதிய வழிகளில் செலவுகளைத் தவிர்க்க முடியாது. இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை உங்களைத் தட்டி எழுப்பும்.
ரிஷபம்:
எப்போதோ உழைத்ததின் பலனை இப்போது அனுபவிக்க நேரும். நண்பர்களும் உறவினர்களும் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் உற்பத்தியிலும் முன்னேற்றத்திலும் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண முடியும். பணப் பரிவர்த்தனை சரியாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

 

 

 

 

மிதுனம் :
அதிக உழைப்பு உங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் சீராக இயங்க நீங்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டியிருக்கும். வருமானத்தைவிட செலவு அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்பு எடுபடாது. நிதானம் தேவை. உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
கடகம் :
வழக்கமான நடைமுறைகளை மாற்றியதால் நன்மைகள் கிடைக்கும். விலகிப்போன நண்பர் திரும்பவும் வந்து பாசத்துடன் உதவி செய்வார். அதிகம் பணிபுரிய நீங்கள் தயங்க மாட்டீர்கள் அதனால், தொழில், வியாபாரம் சிறக்கும். அதிக பணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும்.
சிம்மம்:
சுலபமாகச் செய்து முடிக்கவேண்டிய வேலைகளை இன்று கஷ்டப்பட்டு செய்வீர்கள். கஷடப்பட்டாவது தொழில் வியாபாரத்தில் உள்ள நடைமுறை ஆதாயங்களைப் பாதுகாப்பது அவசியம். வருமானத்தைவிட செலவு கூடுதலாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். கடின உழைப்புக்கிடையில் ஓய்வு தேவை. இல்லையேல் உடல்நலம் கெடும்.
கன்னி:
இன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். உங்கள் உயர்ந்த லட்சியம் மிக எளிதில் நிறைவேறும். நீங்கள் வணங்கும் இஷ்ட தெவம், உங்கள் தொழில் ,வியாபாரத்தைப் பாதுகாக்கும். பண வரவு அதிகம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலைப் பொருட்களை வாங்குவீர்கள்.
துலாம்:
இன்று உங்கள் மனதில் அமைதி நிலவும். உங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வுக்கு சிறந்த உதவி செய்வீர்கள். வெளியூர்ப் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சிறக்கும். பண வரவு தாராளமாகக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சிறப்பான பணிக்காக மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவார்கள்.
விருச்சிகம்:
மிகச் சிறு கஷ்டங்கள் கூட இன்று உங்களை வேதனைப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினரின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். வெளியூர்ப் பயணத்தில் மாற்றம் உருவாகும். தெய்வ வழிபாடு வெற்றியைக் கொடுக்கும்.
தனுசு:
இன்று  உங்கள் பணிகளில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையில் புதிய சாதனையும் உருவாகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்துவந்த தொல்லை நீங்கும்.
மகரம்:

இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம். புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்மறையாகப் பேசுபவர்களிடமிருந்து விலகுவது நலல்து. தொழிலில் உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கு நிறைவேற தாமதம் ஆகும். அத்தியாவசிய செலவுக்கு கடன் பெற நேரும். வாகனத்தில் செல்லும்போது அதிக வேகம் வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம்.
கும்பம்:

இன்று கோவிலுக்குச் சென்று, வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். உங்கள் கடின உழைப்பை குடும்பத்தினர் பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறு விலகும். உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.
மீனம் :
உங்களின் வசதி வாய்ப்புகள் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டும். உங்கள் வியாபார வளர்ச்சி குறித்து பிறரிடம் பேசவேண்டாம். பண வரவு சீராக இருக்கும். கட்டாயப்படுத்தும் விற்பனையாளர்களைத் தவிர்க்க முடியாமல், தேவையற்ற பொருட்களை வாங்கவேண்டாம். சீரான ஓய்வு உடலநல்ம் பாதுகாக்கும்.

^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>