/* ]]> */
Jul 102013
 

தினப் பலன்: 11.7.13:

navagrahas

மேஷம்:
உங்கள் திறமைகள் உங்கள் நண்பர்களால் பாராட்டப்படும்.கடந்த சில நாட்களாக தாமதப்பட்டுவந்த பணி இப்போது சுலபமாக நிறைவேறிவிடும்.தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். அதிகமான வருமானமும் கிடைக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கித் தருவீர்கள்.
ரிஷபம்:
உங்கள்மீது பொறாமை கொண்ட எதிரியின் பேச்சால் மன வேதனை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும். பண வரவும் அதிகரிக்கும். தாராளமாகவும் செலவு செய்வீர்கள். நேரத்துக்கு சாப்பிட்டு உடல்நலத்தைக் காத்துக்கொள்ளுங்கள். வெளியூர்ப் அயணத்தை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.
மிதுனம்:
இன்று மகிழ்ச்சி தாண்டவமாடும். சிறு செயலையும் சரியாகச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.
கடகம்:
பொது இடங்களில் உங்களுடைய தற்பெருமையைப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். கையிலிருக்கும் வேலையை விரைந்து செய்து முடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றத்தை அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையோடு நிறைவேற்றவும். வரவைவிட செலவுகள் அதிகமாகும். வாகனத்தை ஓட்டும்போது அதிக வேகம் காட்ட வேண்டாம்.
சிம்மம்:
குடும்பத்திலுள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். அது உங்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய உங்களிடம் தாராள பண வசதி இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தில் ம்கிழ்ச்சி நிலவும்.
கன்னி:
வசீகரமாஅக்ப் பேசி புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். இதுவரை நீங்கள் முடியாது என்று நம்பிக்கை இழந்துபோன விஷயம் இப்போது சுலமாக நிறைவேறிவிடும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் பெருகும். லாபமும் பெருகும். விருந்து விசேஷங்களில் ஈடுபடுவீர்கள்.
துலாம்:
உங்கள் உறவினர்களிடம் பேச நினைத்த விஷயம் விட்டுப்போகும். உங்கள் சொந்த தேவையை பூர்த்திசெய்வதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலுக்கு அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். உங்கள் சுய கௌரவத்துக்காக அதிகமான செலவு செய்வீர்கள். பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம் :
இன்று உங்கள் பணிகளில் தாமதம் ஏற்படும். பொது இடங்களில் யாருடனும் அதிக நேரம் பேச வேண்டாம். அதிகமாக உழைத்தால் மட்டுமே கூடுதல் உற்பத்தியையும் விற்பனையையும் தொழிலில் உறுதி செய்ய முடியும். பண வரவு சீராக இருக்கும். தரமான உணவை உண்ணுங்கள்.
தனுசு:
இன்று பகல் 3.33 மணி வரை  சந்திராஷ்டமம். அதுவரை  புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் காரியங்களில் இடையூறு செய்துகொண்டிருப்பவரை  உங்கள் வழியிலிருந்து விலக்கி வைக்க சிரப்படவேண்டியிருக்கும்.  பணிகள் குறித்த நேரத்தில் முடியாது. உங்கள் அனுபவ அறிவை உபயோகிக்க வேண்டியிருக்கும். தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். விரும்பிய பொருளை வாங்க கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.
மகரம்:
இன்று பகல் 3.33 மணிக்கு மேல் உங்களுக்கு  சந்திராஷ்டமம். அத்ன் பிறகு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  பழைய தவறுகளை எண்ணி வருந்துவீர்கள். திட்டமிட்ட செயல்கள் தாமதமாகத்தான் நிறைவேறும். . தொழில் ,வியாபாரத்தில்  வளர்ச்சி காண கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். பண வரவும் நன்மைகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சிக்குள்ளேயே  எதிர்ப்பு வலுக்கும். புதிய பதவிகள் கிடைப்பது தாமதமாகும்.
கும்பம்:
இன்று, உங்கள் கவனம் சிதறும். தொழில் வியாபாரத்தில் காலம் தாழ்த்தாமல் செயல்படுங்கள் பணவரவு அளவாகத்தான் இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு கைகொடுக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருளை வாங்கவேண்டாம்.
மீனம்:
நண்பர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி அவர்களை சரி செய்து செயல்பாட்டில் ஈடுபடுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி இருக்கும். பணப் பரிவர்த்தனை சுமாராக இருக்கும். உடல்நலத்துக்கு ஒத்துவராத உணவை உண்ண வேண்டாம். ஓய்வு நேரத்தில் பொழுபோக்காக இசையை ரசித்தல், நடைப் பயிற்சி முதலியவற்றில் ஈடுபட்டு உங்களை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>