/* ]]> */
Jul 092013
 

தினப் பலன் -10.7.13 :

navagrahas
மேஷம் :
இன்று அதிக வேலைப்பளுவினால், மனத் தளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அனைவரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் சுமாராக இருக்கும். வருமானத்தைவிட செலவு அதிகமாக இருக்கும். பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்கள் மனம் அமைதியாக தெளிந்த நீரோடை போலிருக்கும். வெகுநாளாகத் தாமதப்பட்ட ஒரு விஷயத்துக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.
மிதுனம்:
உங்களுக்கு இடையூறாக செயல்பட்டவர் யார் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். புதிய முயற்சியை ஒத்திப் போடுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்புப் பணம் அத்தியாவசியச் செலவுக்குக் கை கொடுக்கும். தியானம் , தெய்வ வழிபாடு செய்யுங்கள். மன அமைதிக்கு முயல்வது நல்லது.
கடகம்:
அதிகமான புத்திசாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். செயல்களின் மூலம் கிடைக்கும் நன்மை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். பண வரவும் லாபமும் நல்ல விதமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்:
நண்பர் ஒருவரிடம் ஏற்கெனவே பெற்ற உதவிக்கு நன்றி சொல்வீர்கள். உங்கள் தொழிலில் உற்பத்தி, விற்பனையும் எதிர்பார்த்த அளவில் இருக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிகழ்த்துவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கன்னி:
எந்த வேலையையும் இன்று தைரியமாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உங்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தவர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பண வரவும் , லாபமும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் , நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவார்கள்.
துலாம்:
இன்று உங்களுக்குப் பழியும் பாவமும் வந்து சேரும். இதுவரை உங்களுடன் நன்கு பழகிய சிலர் உங்களைக் குறை கூறிப் பேசுவார்கள். எதிலும், நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. வியாபாரத்தில் நிலவும் போட்டி உங்களை வேதனைப்படுத்தும். பெருமைக்காக அதிகமாக செலவழிப்பீர்கள். தரமானதும் சுத்தமானதுமான உணவைச் சாப்பிடவும்.

விருச்சிகம்:
உங்களுக்கு ஒரு நம்பிக்கையும் புத்துணர்வும் உண்டாகும். உங்கள் முயற்சிக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி நிறைவேறும். லாப விகிதத்தில் ஒரு பகுதியை அறப் பணிக்கு செலவிடுவீர்கள். பெண்கள் ஆடை அணிகல்ன்கள் வாங்குவர்.
தனுசு:
இன்று சந்திராஷ்டம தினம். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு தாமதமாகும்.இன்று எத்ர்மறையாகப் பேசுபவரிடமிருந்து விலகுவது நல்லது. அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம்.
மகரம்:
உறவினர் ஒருவர் உங்கள் மீது அளப்பரிய அனபைப் பொழிவார்கள். . நீங்கள் அன்புத் தொல்லையாகக்கூட நினைப்பீர்கள். செயல்களில் முன்னேற்றம் காண அதிக கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் தொழில் ஏற்றத்தையும் பாதுகாத்துக்கொள்வது அவசியம். பண வரவு குறைந்த அளவில் இருக்கும். பயனற்ற பொருள்களை வாங்க வேண்டாம்.
கும்பம்:
முக்கியமான வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய நிறைய காலமாகும். பண விஷயங்களில் உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவும். அதன் மூலம், பின்னால் வரும் கஷ்டங்களைத் தடுக்க முடியும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைக்கிடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உடல்நலம் கெட வாய்ப்புண்டு.
மீனம்:
நண்பரிடம் முன்னால், எதிர்பார்த்த உதவி இப்போது கிடைக்கும். இன்று உங்கள் வேலைகளை உற்சாகமாக நிறைவ்றேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். பணவரவும் லாபமும் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>