/* ]]> */
Jul 282013
 

தினப் பலன் -29.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம்:

புதிய நபர்கள் கேட்டால் நீங்கள், உங்கள் கருத்துக்கள் எதையும் கூறவேண்டாம். நீங்கள் அதிகம் உழைத்தால் மட்டுமே தொழில், வியாபாரத்தின் பலன்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். நினைத்த நேரத்திலும் நினைத்த அளவிலும் பண வரவு இருக்காது.  தாமதப்படும். புதிய வழிகளில் செலவுகளைத் தவிர்க்க முடியாது. இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை உங்களைத் தட்டி எழுப்பும்.

ரிஷபம்:
எப்போதோ உழைத்ததின் பலனை இப்போது அனுபவிக்க நேரும். நண்பர்களும் உறவினர்களும் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் உற்பத்தியிலும் முன்னேற்றத்திலும் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண முடியும். பணப் பரிவர்த்தனை சரியாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம் :

அதிக உழைப்பு உங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் சீராக இயங்க நீங்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டியிருக்கும். வருமானத்தைவிட செலவு அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்பு எடுபடாது. நிதானம் தேவை. உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம் :

வழக்கமான நடைமுறைகளை மாற்றியதால் நன்மைகள் கிடைக்கும். விலகிப்போன நண்பர் திரும்பவும் வந்து  பாசத்துடன் உதவி செய்வார். அதிகம் பணிபுரிய நீங்கள் தயங்க மாட்டீர்கள் அதனால், தொழில், வியாபாரம் சிறக்கும். அதிக பணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும்.

சிம்மம்:

சுலபமாகச் செய்து முடிக்கவேண்டிய வேலைகளை இன்று கஷ்டப்பட்டு செய்வீர்கள். கஷடப்பட்டாவது தொழில் வியாபாரத்தில் உள்ள நடைமுறை ஆதாயங்களைப் பாதுகாப்பது அவசியம். வருமானத்தைவிட செலவு கூடுதலாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். கடின உழைப்புக்கிடையில் ஓய்வு தேவை. இல்லையேல் உடல்நலம் கெடும்.

கன்னி:

இன்று  சந்திராஷ்டம தினம். யாருடனும் தேவையற்ற வாக்குவாதங்களோ, அவர்களைப் பழித்துப் பேசுவதோ கூடாது. இன்று  பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும், ஏனென்றால், அந்த முயற்சிகள் நல்ல முறையில் தொடராது. பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.  உங்கள் உயர்ந்த லட்சியம் நிறைவேற முடியாமல் தாமதப்படும். உங்கள் தொழில் ,வியாபாரமும்,  பண வரவும் சுமாராக இருக்கும். வீட்டை அழகுடுத்தும் முயற்சிகளை ஒத்திப்போடவும்.

துலாம்:

உங்களை வேதனைப்படுத்திவந்த   கஷ்டங்கள் இன்று தவிடுபொடியாகும். தொழில் வியாபாரத்தை பெருக்க  அதிக முதலீடு செய்வீர்கள்.  தொழில் வளர்ச்சிக்கும், நல்ல லாபத்துக்கும் இன்று அஸ்திவாரம் உறுதிப்படும். உறவினர் உறுதுணையாக இருப்பர்.  பிரயாணங்கள் அனுகூலம் தரும் . தெய்வ வழிபாடு சிறப்பினைக் கொடுக்கும்.

விருச்சிகம்:

உங்கள் மனதில் அமைதி நிலவும். உங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வுக்கு சிறந்த உதவி செய்வீர்கள். வெளியூர்ப் பயணம் பயனுள்ளதாக அமையும். தொழில் வியாபாரம் சிறக்கும். பண வரவு தாராளமாகக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சிறப்பான பணிக்காக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.

தனுசு:

உங்கள் வேலைகள் யாவும் நேர்த்தியுடன் திகழும். தொழில் உற்பத்தி பெருகும் .விற்பனையில் சாதனை படைக்கவும் முடியும். பணப் பரிவர்த்தனை திருப்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்துவந்த  தொல்லைகள் தீரும்.

மகரம்:

உங்கள் சமயோசித அறிவு உங்களுக்கு புகழையும் நன்மையையும் கொடுக்கும். தொழிலில் வளர்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். அதிக பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சி பெருகும் .நற்பெயரையும் ஈட்டித்தரும்.

கும்பம்:

இன்று கோவிலுக்குச் சென்று, வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். உங்கள் கடின உழைப்பை குடும்பத்தினர் பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறு விலகும். உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

மீனம் :

உங்களின் வசதி வாய்ப்புகள் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டும். உங்கள் வியாபார வளர்ச்சி குறித்து பிறரிடம் பேசவேண்டாம். பண வரவு சீராக இருக்கும். கட்டாயப்படுத்தும் விற்பனையாளர்களைத் தவிர்க்க முடியாமல், தேவையற்ற பொருட்களை வாங்கவேண்டாம். சீரான ஓய்வு உடலநல்ம் பாதுகாக்கும்.

^^^^^^^^^^^^^

[ ரூ.950/- செலுத்தி உங்கள் ஜாதகத்துக்கு விரிவான பலன்கலைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்.]

***********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>