/* ]]> */
Jul 262013
 

தினப் பலன் 27.7.13

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம் :
புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு இருக்கும். தொழிலில் உற்பத்தியும், விற்பனையும் அதிகமாக இருக்கும் . பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டை அழகுபடுத்த அலங்காரப் பொருள்கள் வாங்குவீர்கள்..
ரிஷபம்:
சூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வீர்கள். தொழிலில் உங்கள் இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்துக்கு போதிய ஓய்வு தேவைப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க, கடன் வாங்க பேண்டி வரும். அதிகம் பயனில்லாத பொருள் வாங்க வேண்டாம்.
மிதுனம்:
இன்று மிக மோசமான ஒருவரிடமிருந்து உதவி பெறக்கூடிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும். பொறுமை காக்க வேண்டியது அவசியம்.தொழிலில் குறிப்பிட்ட இலக்கை அடைய காலதாமதமாகும். விலை உயர்ந்த பொருளை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளவும். குடும்ப ஒற்றுமையில் சிறு சலனம் ஏற்படும்.
கடகம்:
இன்று சந்திராஷ்டம தினம். யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்திப் போடவும். நண்பருக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு திண்டாடவேண்டாம். அவசர வேலைகள் உங்களைத் தடுமாற வைக்கும்.விலை உயர்ந்த பொருளைத் தவறவிடும் அபாயம் உள்ளதால், பத்திரப்படுத்தி வையுங்கள். தொழில் வருமானத்தைத் தக்க வைத்துக்கொள்வது அவசியம். பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.
சிம்மம்:
பணிகளில் குளறுபடி ஏற்படும். அனுபவப்பட்டாவர்களின் அறிவுரை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் இலக்கை எட்டிப்பிடிக்க கால அவகாசம் தேவைப்படும். வியாபாரத்தைப் பெருக்க அதிக முதலீடு தேவைப்படும். முதலீட்டுக்குத் தேவையான நிதியின்மை காரணமாக தொழிலில் சுணக்கம் உண்டாகும். நல்லதொரு தருணத்திற்காக காத்திருப்பதும், பொறுமை காப்பதும் அவசியம். இறை நம்பிக்கை வெற்றியளிக்கும்.
கன்னி:
மனதில் கலையுணர்வு பரிமளிக்கும். வேலைகளைப் புத்துணர்வோடு செய்வீர்கள். சக பணியாளர்கள் உதவியாக இருப்பதோடு தகுந்த ஆலோசனை சொல்வார்கள். தொழிலில் திருப்திகர பண வரவு இருக்கும். விழாக்களிலும் விருந்துகளிலும் கலந்துகொள்வீர்கள்.
துலாம்:
எவ்வளவு ந்ற்செயல்கள் புரிந்தாலும், மனக் கவலைகள் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் மீது பகைமையுணர்ச்சியோடு பழகுபவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். தொழிலில் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்துவீர்கள். பணவரவைவிட செலவு அதிகமாகும். பெண்கள் செயற்கைப் பூச்சுக்களை உபயோகிப்பதில் கவனம் தேவை.
விருச்சிகம்:
சிறு வேலைகளையும் நிறைவோடு செய்வீர்கள். இதன்மூலம் அதிக பயன் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து அதிக லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் உறவினர் வருகையால மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.
தனுசு:
எல்லோரிடமும் வேறுபாடின்றி பழகுவீர்கள். நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்தரம் உயரும். சேமிப்பும் உயரும். பெண்களுக்கு தாய்வீட்டினரின் உதவி கிடைக்கும்.
மகரம்:
மற்றவர்களின் கைப்பாவையாக செயல்படுவீர்கள். அவர்களுடைய எதிரிகளை வசைபாட உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்களை விட்டு விலகினால்தான், உங்களுடைய சிரமங்கள் குறையும்.தொழிலில் நிலுவைப் பணி தாமதப்படும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது மித வேகம் அவசியம்.
கும்பம்:
உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். தொழில் இலக்கை அடைய உங்கள் உழைப்பும் மூளையும் காரணமாகும். நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரசப் பேச்சுவார்த்தைகள் வெற்றியைக் கொடுக்கும்.
மீனம்:
உங்கள் நண்பருடன் உங்கள் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
^^^^^^^^^^^^^^^
[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன்களை ரூ. 950/- செலுத்தி தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும். ]
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>