/* ]]> */
Jul 252013
 

தினப் பலன் 26.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம்:
புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம்; தாமதப்பட்டுவந்த பணிகளை புதிய முயற்சியினால், விரைந்து முடித்தல்; வியத்தகு தொழில் வளர்ச்சி; பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும்; உறவினரின் அன்பு, பாசம் அதிகரிக்கும் .
ரிஷபம்:
சிலரின் தேவையற்ற அறிவுரையால், மனதில் சங்கடம்; சகிப்புத்தன்மை அவசியம்; தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கால அவகாசம் தேவை; பணவரவைவிட செலவு அதிகரிக்கும்; வாகனத்தில் அதிவேகத்தைக் கட்டுப்படுத்தவும்.
மிதுனம்:
பகைமை குணம் உள்ள ஒருவர் உதவிவதுபோல் பாசாங்கு செய்வார்; பெருந்தன்மையுடன் விலகவும்; சுமாரான தொழில் உற்பத்தி; சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்; வெளியூர்ப் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.
கடகம்:
இன்று சந்திராஷ்டமம் இரவு 10 மணி வரை இருப்பதால், வாக்குவாதங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். மற்றபடி, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்; தொழில் போட்டிகளை தகுந்த உபாயத்துடன் முறியடிப்பீர்கள்; தொழில் உறப்த்தி பெருகும்; பணவரவு அதிகரிக்கும்; பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்; குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்
சிம்மம் :
இன்று இரவு 10 மணிக்குப் பிறகு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் வருகிறது. அச்சமயம், புதிய முயற்சிகளையும், வாக்குவாதனக்ளையும் தவிர்க்கவும். சமயோசிதமாக பேசுவீர்கள்; நண்பர், உறவினர்களுக்கு உங்கள் மீதான நலல் எண்ணம் வளரும்; தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி; வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்.
கன்னி:
நீங்கள் மிகப் பெரிதாக நினைத்த செயல் நிறைவேற தாமதமாகும்; திட்டமிட்ட பணி மட்டுமே வெற்றி பெறும்; சக தொழில் சார்ந்தவர்களிடம் சச்சரவு கூடாது; குடும்பத்துக்கான பணத்தேவை அதிகரிக்கும்; பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதில் நிதான அணுகுமுறை அவசியம்;
துலாம்;
தொடர்பில்லாத பணியில் ஈடுபடுவீர்கள்; தொழில் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். பணவரவில் தாமதம்; வீடு, வாகன பராமரிப்பில் கவனம் அவசியம்; ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
விருச்சிகம் :
உங்கள் நடை,உடை,பாவனைகளில் வசீகரம் இருக்கும்; அன்புக்குரியவர்களின் உதவி கிடைக்கும்; தொழில் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்; ஆதாய பண வரவு கிடைக்கும்; இஷ்ட தெவ வழிபாடு நடத்துவீர்கள்.
தனுசு:
இன்று செயல்களில் தடுமாற்றம்; நல்லவர்களின் ஆலோசனை நலம் பயக்கும்; தொழிலில் உள்ள தினப்படி பணிகளை நிறைவேற்றுவீர்கள்;பணவரவைவிட செலவு அதிகரிக்கும்; உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
முக்கியமான செயல் ஒன்று உங்கள் நிதான அணுகுமுறையால் நிறைவேறும்; நண்பர் மகிழ்ச்சிகரமான தகவல் தருவார்; தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி; சமூக அந்தஸ்து கூடும்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கும்பம்:
மனதில் துயரம் ; எதிர்கால நம்பிக்கை அவசியம்; சராசரி தொழில் உற்பத்தி, விற்பனை ; சுய கௌரவத்துக்காக தாராள பணச் செலவு செய்வீர்கள்; பெண்கள் தங்க நகை இரவல் கொடுப்பதோ வாங்குவதோ கூடாது.
மீனம்:
உறவினர் உங்கள் நற்செயல் நிறைவேற துணை புரிவார்; மனதில் உற்சாஅக்ம்’ தொழில் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு; தாராள ப்ண வரவு; குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவீர்கள்.
^^^^^^^^^^^^^^^^^
[ ரூ. 950 செலுத்தி, உங்கள் ஜாதகப்படி விரிவான பலன் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]
*******************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>