/* ]]> */
Jul 232013
 

தினப் பலன்: 24.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம் :
பலநாள் விருப்பம் எளிதில் நிறைவேறும்;எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை வரும்;தொழில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்; ஆதாய பண வரவு உண்டு; நண்பருடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்.
ரிஷபம் :
இதுவரை  பணிகளில் இருந்துவந்த குழப்பம்களும்  தடுமாற்றமும் நீங்கும் ; உங்கள் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட  நல்லவர்கள் வலிய வந்து  ஆலோசனை வழங்குவார்கள் ; சராசரி தொழில் உற்பத்தி; புதிய இனங்களில் பணசெலவு அதிகரிக்கும் ; அதிக பணச்செலவை வியாபார விருத்திக்காக உபயோகிப்பீர்கள் பணம் ; வேகமாக வாகனம் ஓட்டவேண்டாம்.

மிதுனம்:
இன்று பகல் 2,52 மணி வரை சந்திராஷ்டமம்; புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும்; யாருடனும் வாக்குவாதங்கள் வேண்டாம்; வித்தியாசமான பணிகள் உருவாகி தொந்தரவு கொடுக்கும்; சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது ; தொழிலில் இப்போது இருக்கும் அனுகூலங்களைப் பாதுகாத்திடுவீர்;

கடகம்:
இன்று  மாலை 5.46 மணி முதல் சந்திராஷ்டம தினம் ;  யாருடனும் வாக்குவாதங்களையும் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் தவிர்க்கவும்  ; முன்னர் உங்களிடம் உதவி பெற்றவர் உதாசீனமாக நடந்துகொள்வார்; அவர்களிடமிருந்து விலகினால் ம்ன நிம்மதி கிடைக்கும்;கூடுதல் முயற்சியினால், தொழில் உற்பத்தியும் விற்பனையும் சீராகும்; பணச் செலவில் சிக்கனம் நல்லது; போக்குவரத்தில் வேகம் கூடாது. உறவினர் வகையில் அதிக பணச் செலவு செய்ய நேரும்.

சிம்மம்:
சிலர் சொல்லும் ஆலோசானை மனதுக்கு ஏற்புடையதாக அமையாது.சுய சிந்தனை தேவை;தொழிலில் அளவான வளர்ச்சி;சேமிப்பு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும்;பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லவ்ண்டாம்.

கன்னி:
நண்பர்கள் உங்கள் நல்ல குணத்தைப் பாராட்டுவர்; பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்; தொழில் வளர்ச்சி; அதிக லாபம்; பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்.

துலாம்:
கடந்த காலத்தில் இடையூறு தந்துகொண்டிருந்தவர் இப்போது விலகிப் போய்விடுவார்;நிறைவேறவேண்டிய பணியை மாற்று உபாயத்தினால் செய்து முடிப்பீர்;தொழில் வளர்ச்சி திருப்திகரமாகும் அதிக வருமானம் வரும் ; கடனில் ஒருபகுதி அடைபடும்;அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்கும்.

விருச்சிகம்:
பிறருக்கு இயன்ற அளவில் உதவி; உங்கள் நன்மதிப்பு சமூகத்தில் வளரும்; தாராள பண வசதி; தொழிலில் அபிவிருத்திப் பணி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; தெய்வ வழிபாடு சிறக்கும்.

தனுசு:
மனதில் இனம் புரியாத சஞ்சலம்; வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்வது அவசியம்;தொழில், வியாபார நடைமுறை தாமதமாக இயங்கும்;அவசிய செலவுக்கு பணக்கடன் பெறுவீர்; பெண்கள் தங்க நகையை கவனமுடன் பாதுகாக்கவேண்டும்.

மகரம்:
மனதில் புதிய ஞானம் நிறைந்த சிந்தனை; சில நாட்கள் சவாலாக இருந்த செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம்; அதிக லாபம்; அவசிய செலவுகள் ; இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்.

கும்பம்:
இன்றைய நிகழ்வுகள் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும்; .குடும்ப உறுப்பினர்கள் மீது அதிக அன்பு காட்டுவீர்; தொழில் வளர்ச்சி; கூடுதல் லாபம்; அவசிய செலவுகள ; தாயின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

மீனம்:
வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொல்லை தரும்;உங்கள் செயல்திறன் காப்பாற்றும்;தொழில் வளர்ச்சிக்கு கால அவகாசம் தேவைப்படும்; எதிர்பார்த்த பண வரவு கிடைப்பதில் தாமதமாகும்; அதிக பயனற்ற பொருள் வாங்கவேண்டாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள வேண்டுவோர் moonramkonam @gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகோள்ளவும்].
**********************************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>