/* ]]> */
Jul 222013
 

தினப் பலன் 23.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

navagrahas
மேஷம்:
செயல்களில் நிறைய சீர்திருத்தம் தேவைப்படும்; தொழிலில் போட்டி அதிகரிக்கும்; கடன் பணம் வசூலிப்பதில் நிதான அணுகுமுறை அவசியம்; பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தர்ருவீர்;தரமான உணவு உட்கொள்ளவும்.
ரிஷபம்:
நண்பரின் உதவி கிடைத்து மனதில் உற்சாகம் பிறக்கும்; பணிகளில் புதிய பரிமளிப்பு ஏற்படும்; தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும்; பண வரவும் நன்மையும் அதிகரிக்கும்; வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்.
மிதுனம்:
இன்று சந்திராஷ்டமம்; புதிய முயற்சிகளோ, வாக்குவாதங்களோ வேண்டாம் ; வழக்கத்திற்கு மாறான பணி, தொல்லை தரும்; நிதானப் பேச்சு தவறினால், சிரமம் உண்டாகும்; தொழில் சிறக்க அதிக உழைப்பு தேவை; அவசிய செலவுக்கு சேமிப்பு உதவும்; விற்பனையாளரின் பகட்டான பேச்சில் மயங்கி, அதிக உபயோகமற்ற பொருளை வாங்க வேண்டாம்;
கடகம்:
மனதில் ஆன்மீக நம்பிக்கை ; செயல்களில் புத்திசாலித்தனம்; தாராள பணச் செலவில் தொழில் அபிவிருத்திப் பணி; உறவினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம்; அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை விலகும்.
சிம்மம்:
பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம்; திட்ட பணி நிறவேற்றலில் குறுக்கீடு வந்து விலகும்; அளவான தொழில் உற்பத்தி; ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தால் கடன் வாங்கும் அவசியம் இல்லை;உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
கன்னி:
உங்கள் மீது நம்பிக்கை கொண்டவர் விலகும் சூழ்நிலை உருவாகும்; தொழிலில் போட்டி; லாப விகிதம் குறையும்; நிலைமை உங்கள் முயற்சியால் சரியாகும்; ஒவ்வாத அழகு சாதனப் பொருள் அலர்ஜி உண்டாக்கும்; உடல் நலம் காகக் சீரான ஓய்வு அவசியம்.
துலாம்:
இஷ்ட தெய்வ வழிபாடு; பலநாள் தாமதமான செயல் நன்மை பயக்கும்; தொழிலில் அபிவிருத்தி; அதிக லாபம்; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்.
விருச்சிகம்:
உங்கள் வாழ்க்கைச் சிரமங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்; தொழில் வெற்றிக்கு அதிக உழைப்பு தேவை; அளவான பண வரவு; தவிர்க்க இயலாத வகையில் புதிய இனங்களில் பணச் செலவு; தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
தனுசு:
உங்கள் எண்ணம், செயல்களில் புதிய பரிமாணம் ஏற்படும்; பணிகளில் சுதந்திர உணர்வுடன் ஈடுபடுவீர்கள்; தொழிலில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும்; பணப் பரிவர்த்தனை திருதியாக இருக்கும்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்.
மகரம்:
உங்களிடம் பகைமைக் குணம் உள்ளவர் உங்களைப் பரிகாசிப்பர்; பெருதன்மையுடன் விலகி ,சுய கௌரவம் காத்திடுவீர்; தொழில் நடைமுறையில் தாமதம் நிலவும்; பண வரவைவிட குடும்பச் செலவு அதிகரிக்கும்; சாகச விளையாட்டுகள் மாணவர்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்கும்.
கும்பம்:
உறவினர் நண்பர்கலைன் உடஹ்வி கியடிக்கும்; வாழ்வியல் நடைமுறையில் புதிய நம்பிக்கை கொள்வீர்; தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்; அதிக லாபம்; பெண்கள் புதிய ஆடை அணிகலன் வாங்குவர்.
மீனம்:
இலட்சிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்; குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்; தொழில், வியாபாரம் செழித்து வளரும்; தாராள பண வரவில் குடும்பத் தேவைகள் நிறைவேறும்; உத்தியோகஸ்தர்களின் சிறப்பான பணி, நிர்வாகத்தின் பாராட்டு, வெகுமதிகளைப் பெற்றுத் தரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

[ விரிவான் பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர்,  moonramkonam@gmail.com  என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>