/* ]]> */
Jul 202013
 

தினப் பலன் 21.7.13:

navagrahas
மேஷம்:
சுய தேவைகள் பூர்த்தியாகும்;கடந்த காலத்தில் நண்பருகு செய்த உதவிக்கு நற்பெயர் கிடைக்கும்;தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்; பணப்பரிவர்த்தனை முன்னேற்றம்; குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி.

ரிஷபம்:
இன்று சந்திராஷ்டம நாள்; புதிய முயற்சிகளோ, வாக்குவாதமோ வேண்டாம்; பணிகளில் குளறுபடி; முன்யோசனை தேவை; தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் குறையும்; குடும்பச் செலவு, பண வரவைவிட அதிகமாகும்; இயந்திரங்களில் பணிசெய்வோர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மிதுனம்:
பலநாளாக நினைத்த செயல் நிறைவேறும்;உறவினரும் நணப்ரும் வாழ்த்துவர் வியத்தகு தொழில் வளர்ச்சியால் நன்மைகள்; பனவரவில் திருப்தி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்;அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை குறையும்.

கடகம்:
சிறு வேலைக்கும் அதிக முயற்சி; நிதான அணுகுமுறை தேவை;தொழிலில் உற்பத்தியும் விறபனையும் குறையும்;பிறர் பார்வையில் படும்வண்ணம் அதிக செலவு செய்யவேண்டாம்; ஒவ்வாத உணவால் பாதிப்பு.

சிம்மம்:
முன்னர் உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து பேசுவார்; சொந்தப் பணியில் அக்கறை; மன அமைதி; தொழில், வியாபாரத்தில் தாமதம்;பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம்;உடல்நலத்துக்கு சீரான ஓய்வு தேவை.

கன்னி:
சாந்தமான பேச்சு;தொழில் வியாபாரம் செழித்து வளர புதியவர் உதவி; ஆதாய பண வரவு; குடும்ப அத்தியாவசிய செலவுகளை நிறைவேற்றுவீர்..

துலாம்:
எந்த செயலையும் பரிசீலித்து செயய்வும்; தொழிலில் பணி தேக்கம்; அளவான பணவரவு;உறவினர் வகையில் கூடுதல் செலவு;வாகனத்தில் மிதவேகம் அவசியம்.

விருச்சிகம்:
பகைவர் ஒருவரை பொது இடத்தில் சந்திப்பீர்; ; பெருந்தன்மை காட்டுவீர்; அதிக பணவரவும் நன்மையும்;விரும்பிய உணவு உண்பீர்கள்;ஆரோக்கியம் உண்டு.

தனுசு:
இன்றைய பணிகளில் தேக்கம் கூடாது; தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் சுமாராக இருக்கும்; குடும்பசெலவுக்கு சேமிப்பு கரையும்; மருத்துவச் செலவு ஏறப்டும்; பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்கவேண்டாம்.

மகரம்:
சிந்தனை மாற்றம்; நன்றி மறந்தவருக்கும் இயன்ற உதவி; தொழில் அபைவிருத்தி; பணவரவில் திருப்தி; வீட்டை அழகுபடுத்த கலையன்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்.

கும்பம்:
நீதி நேர்மை நட்வடிக்கையில் வெளிப்படும்; பலரும் அன்பு பாராட்டுவர்; தொழில் வளரும் சூழல்; அதிக பண வரவு; உத்தியோகஸ்தர்கள் நிர்வாகம் சிறக்க ஆலோசனை கூறி நற்பெயர் பெறுவர்.

மீனம்:
உறவினர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்; தொழிலில் அதிக பணிச்சுமை ; பணவரவைவிட கூடுதல் செலவு; கால்க்கெடு கடந்த உணவுப் பொருள் வாங்குவதால் பிரச்சினை ; உடல்நலத்துக்கு சீரான ஓய்வு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^[
[ விரிவான ஜாதக பலன்களை அறியவேண்டுவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்]
**********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>