/* ]]> */
Apr 022018
 

திடீர் ஞாபக மறதி ஏற்படுவது ஏன்?

memory loss

சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமலே, புத்தகப் பையை திறந்து தேடுவோம். ஒரு சிலரின் முகம் நினைவில் இருந்தாலும், அவரது பெயரை மறந்துவிடுவோம். இதெல்லாம் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவமே. இதுபோன்ற ஞாபக மறதிகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

சைக்கிள் சாவியை எங்கே வைத்தோம் என மறப்பது பெரிதல்ல. ஆனால், அந்த சாவியைக் கையில் வைத்துக்கொண்டு, இது எதற்கான சாவி என மறப்பதுதான், சற்றே கவலைக்குறியது. தீவிர் மறதியான ‘அல்சைமர்’ நோய் ஏற்படும்போது, நம் வீட்டில், நம்முடன் இருப்பவர்களைக்கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.. பல நினைவுகள் அழிந்து, இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத நியலி ஏற்படும்.

சமீப காலங்களில், மூளை குறித்தும், மறதி போன்றவை குறித்தும், குறிப்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. மன அழுத்தம், பதைபதைப்பு, தூக்கம் இன்மை போன்ற பல காரணங்களினால், சாதாரண மறதி ஏற்படுகின்றது. தோலில் சுருக்கம் ஏற்படுவது போல வயது கூடக்கூட, மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, வயதாகும்போது புதிய விஷயங்களைக் கற்க கூடுதல் காலம் எடுக்கின்றது. காலப் போக்கில் நினைவுகள் மங்கி மறைந்து போகின்றன. இது முதுமையின் விளைவு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>