தாய் கய் யங்: பர்மா உணவு-செய்வது எப்படி?
தேவை:
முழு கோழி-1; பூண்டு-6 பல்’ மல்லித்தழை தண்டுடன்-12; பனை வெல்லம்-3 டீஸ்பூன்; வெள்ளை மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்; மல்லித்தூள்-1 டீஸ்பூன்; மீன் சாஸ்-10மில்லி; சோயா சாஸ்-2 டீஸ்பூன்; மஞ்சள் குழம்பு பேஸ்ட்- 2 –டீஸ்பூன்;
செய்முறை:
கோழியைத்தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து அரைத்து 4 மணி நேரம் 4 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
கோழியை உரித்து சுத்தம் செய்து , நடுவில் இருக்கும் எலும்பை மட்டும் எடுத்துவிட்டு, நெஞ்செலும்புடன் 2 துண்டுகளாக்கிக் கொள்ளவும். மசாலாக் கலவையை சிக்கனில் தடவி 4 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். கிரில் தட்டில் எல்லாப் பக்கமும் சிவக்க வேகும்வரை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும். நூடுல்ஸ், தாய் சாஸுடன் சாப்பிடலாம்
***************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments