/* ]]> */
Jul 142014
 

தாயாகிறார், நடிகை ஹன்சிகா:

HANSIKA WITH ORPHANED CHILDREN
சிறு வயது முதலே, ஹன்சிகாவிடம் தாய்மைக் குணம் வளர்ந்து வந்தது. இவருடைய மூன்றாவது பிறந்தநாள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடப்படட்து. அதுமுதல் இவருடைய அனைத்துப் பிறந்த நாட்களும் அங்கேயே கொண்டாடப்பட்டன. இப்போது அவர் 25 ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத்தாய். ஆதரவற்ற குழந்தைகள், வீதியில் திரியும் குழந்தைகள், அப்பாவையும் இழந்து, அம்மாவையும் இழந்து தவிக்கும் பிள்ளைகள், இவர்கள் அனைவரையும் பார்க்கும்போது மனதில் ஈரம் கசியும் ஹன்சிகா, அனைவருக்கும் தனியாக மும்பையில் வீடு ஒன்று கட்டுகிறார். நடிக்கத் தொடங்கியது முதல், தன் சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்காஅக் ஒதுக்கி, சேமித்து வருகிறார்.
தன் பிறந்தநாளை முதல்நாள் குழந்தைகளுடன் கொண்டாடிவிட்டு, மறுநாள்தான் நணப்ர்களுடன் கொண்டாடுகிறார். குழந்தைகளுடன் குலு மனாலியில் அவர்களின் விடுமுறையைக் கழிக்க எண்ணியவர், ஷூட்டிங் இருந்ததால், இவருடைய தாயார், குழந்தைகளை அழைத்துச் சென்றாராம்.
இவருடைய தாயார், ஒரு டாக்டர். இவர் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்திருக்கிறார். நடிப்பை மட்டும் கவனிக்காமல், தொண்டுள்ளமும் கொண்ட இவர் தாயாகமலே, ஒரு தாயானவர்.
^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>