/* ]]> */
Aug 102010
 



உலகத் தமிழர் உணர்வுகள் குறித்து பாடலாசிரியை தாமரையின் கருத்துக்கள் படிக்கும் எவரையும் அவருடைய தைரியம் குறித்து வியப்படையச் செய்யும்.எத்தனை தீர்க்கமான கருத்துக்கள்,எவருக்கும் அஞ்சாத மனப்போக்கு!
செம்மொழி மாநாடு பற்றி”விட்டுத் தள்ளுங்கள் அந்த வீண் அரட்டையை என்கிறார்”. சீமானைப் பற்றி “அவர் தீரம் மிகுந்த நாயகன்” என்று உலகத் தமிழர்கள் கருதுவதாகச் சொல்கிறார். தொடை நடுங்கித் தீரன்களும், மேடையிட்டு கொஞ்சமும் கூச்சமில்லாமல் தனி நபர் வழிபாடுகள் நிகழ்த்தும் அஞ்சாநெஞ்சர்களும் நிறைந்த நம் தமிழ்த் திரையுலகினர் மத்தியில்,சீமான், “நாயகன்”தான்.

நடிகர்கள் அசின்,கருணாஸ் ஆகியோருக்கும் சரியான பதிலடி கொடுக்கிறார். நடிகர் சங்கத்தலவர் சரத்குமாருக்கு ” அவர் மிகுந்த எச்சரிக்கையோடும், இன உணர்வோடும் செயல்படவேண்டும் என்றுகொடுத்திருக்கும் அறிவுரைமிகப் பொருத்தமானதே. தமிழ்த்திரைவுலகையே கூட சிங்கள அரசு நினைத்தால் இரண்டாக்கும் என்றும், தமிழ்த் திரைவுலகினரை சிங்கள அரசு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்பது பொருளாதார மேம்பாடு அடைவதர்காகவும் தான் என்றும் போட்டு உடைக்கிறார் தாமரை.

“உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கப்பூர்வமான கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் (பிரபாகரன்) கையில் தமிழீழத்தை ஒப்படைக்கும்” என்று நம்புகிறார் தாமரை. அவர் நம்பிக்கை நிஜமாகட்டும்! தனியொரு பெண்ணாக நின்று, அச்சமேதும் இல்லாமல் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்கும் தாமரைக்கு,தரலாம் ஒரு பூங்கொத்து!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>