/* ]]> */
Nov 212011
 

“என்னதான் தலைமுடிய பராமரிச்சாலும் முடி கொட்டுறது நிக்கவே மாட்டேங்குதே” எனக் கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? ஆயிரம்தான் ஓடியோடி பராமரிச்சாலும் முடி கொட்டுதா? அப்படின்னா இதப் படிங்க முதல்ல.

வழுக்கை

என்னதான் முக அலங்காரம் செய்தாலும், முடி இல்லைன்னா ஒண்ணுமே எடுபடாது. அதனால, உங்க கவலை நியாயமானதுதான்.

சிலருக்கு  சரியாக எண்ணெய் தேய்த்து முறையாக பராமரித்தும் கூட, முடி உதிரும் பிரச்சனை தீர்வதில்லை. இதற்குக் காரணம் சத்துக் குறைவு.

  • இன்றைய இயந்திரமயமான உலகில் பலருக்கும் காலை உணவு சாப்பிட நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா?

காலை உணவு ராஜா மாதிரி சாப்பிடனுமாம். ராஜா மாதிரி இல்லைனாலும் ஒரு சின்ன விஷயம் சொல்றேன்.முயற்சி பண்ணி பாருங்க.

ஒரு தம்ளர் பாலும் அதில் நான்கைந்து பேரீச்சம்பழத்துண்டுகளும் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் ஐஸ் துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழ வாசனை பிடிக்காதவர்கள், இதனுடன் கூடுதலாக, ஏலக்காய் அல்லது boost சேர்த்துக்கொள்ளலாம்.

(காலையில் காபி அல்லது தேநீர் குடித்து அரைமணிநேரம் கழித்து இதைக் குடிப்பது நலம்.இப்படிச் செய்வதால் சத்துக் குறைவுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாம போய்டும்.)

மனித மூளை ஒரு நாள் முழுவதும் வேலை செய்வதற்குத் தேவையான குளூக்கோசை, ஒரு நாளின் முதல் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

அதனால, எழுந்திருச்ச ரெண்டு மணிநேரத்துக்குள்ள காலைல சாப்பாட முடிச்சுடுங்க.

  • நான் என்னவோ ரொம்ப குண்டா இருக்கற மாதிரி தோணுது.என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் பண்றாங்க. அதனால நான் டயட்ல இருக்கேன் என சொல்பவரா நீங்கள்?

நான் மேலே குறிப்பிட்டுள்ள முறை உங்களுக்கும் அப்படியே பொருந்தும்.
சாப்பிடாம இருந்தா அதுக்கு பேரு டயட் இல்லீங்க. அதுக்கு பேரு பட்டினி.

இப்படி பட்டினி கிடந்தா உங்க உடம்புல இருக்கற இரத்த சிவப்பணுக்களோட எண்ணிக்கை குறைஞ்சு போய் உடம்பு இன்னும் குண்டாயிடும்,முடியும் கொட்டும். அதனால பசிக்கும்போது எதையாவது சாப்பிடுங்க.

  • எல்லாரும் சொல்ற மாதிரி சாப்பாட்டு வகைல கீரை, பச்சைக் காய்கறி எல்லாம்தான் சேத்துக்கறேன். டெய்லி ரெண்டு கேரட் பச்சயாவே சாப்பிடறேன். ஆனாலும் இந்த முடி கொட்டுறது நிக்கவே மாட்டேங்குதுப்பா என சொல்பவர்களில் நீங்களும் ஒருவரா?

கீரை, பச்சைக் காய்கறிகள் போன்றவை உடலுக்கு ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல், தலை முடி வளர்வதற்கும் பெருந்துணை புரிகின்றன.

ஆனா, இங்க கொஞ்சம் கவனிங்க. பச்சைக் காய்கறிகள்னு சொன்னா கேரட், பீட்ரூட் இல்லை. இது வேறங்க. பீன்ஸ்,அவரை,காலிப்ளவர்,முருங்

கைக்காய் இதெல்லாம்தான் பச்சைக் காய்கறிகள். அப்போ, பச்சை கலர்ல இருக்கற காய்கறிகளை வாங்கி சாப்பிடனும்னு அர்த்தம்.

  • அப்பப்பா எவ்ளோதான் ட்ரை பண்ணாலும் ஒரு வேலையும் முடிக்க முடியலை. எல்லாமே தப்பு தப்பாதான் போய் முடியுது என கவலைப்படுபவரா நீங்கள்?

 

இதுதான் இருப்பதிலேயே பெரிய பிரச்சனை. இதற்கான தீர்வு உங்களிடம் மட்டுமே உண்டு.உங்களுடைய மனக்கவலைகள் தலைமுடி உதிர்வுக்கு உற்ற நண்பன்.

அதனால, உங்க மனக்கவலைய ஓரங்கட்டி வச்சுடுங்க. இல்லனா தலைமுடி உதிருதே அப்படீங்கற கவலைய ஓரங்கட்ட வேண்டியதுதான்.

tags : தலைமுடி,கூந்தல்,அழகு குறிப்பு,அழகு குறிப்புகள்,கூந்தல் வளர,தலை முடி வளர,வழுக்கை,சொட்டை, hairloss, hair falling, tamil beauty tips, tips for beautiful hair, tips for long hair, preventing hairfall, baldness, beauty tips in tamil, tamil beauty tips

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>