/* ]]> */
Jan 032018
 

தலைமுடி எத்தனை முறை விழுந்து முளைக்கும்?

FALLEN HAIRS

கரோட்டின் புரதத்தால்  ஆன புரத இழைகளே முடி. இவை மயிர்க் கால்களில் உருவாகி, வெளியே வருகின்றன. தலையில் சுமார் லட்சம் முடிகள் இருப்பதாக் கூறூகின்றனர். இதில் 100-150 முடிகள் உதிர்வது இயல்பு. தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர்  நீளத்துக்கு முடி வளரும்.

முடி வளர்ச்சி 3 கட்டங்களைக் கொண்டது.

முதல் கட்டம்:அனாஜன்(Anagen) 2 முதல் 7 ஆண்டுகல் வரை இந்த வளர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மயிர்க் காலில் இருந்தும் வெவ்வேறு வேகத்தில் வெவ்வேறு தடிமனில் முடி வளரும்.

இரண்டாம் கடட்ம்:

காட்டஜன்(CaTAJEN)

அடிப்பகுதி முடி மயிர்க் கால்கலின் குழாயில் ஒட்டிக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக புதிய முடியை உருவாக்கும் செல்களிலிருந்து தனிமைப்படும். சுமார் 2 வாரங்கள் வரை நீடிக்கும். இந்தக் கட்டத்தில் உயிர்ப்பிழந்த முடிகள் உதிரும்.

மூன்றாவது கட்டம்: (Telogen)

சுமார் 2 முடஹ்ல் 4 மாதங்கள் நீடிக்கும் . இந்தக் கட்டத்திற்குப் பிறகு உடிர்ந்த மயிர்க் கால்களில் மறுபடி முடி வளரத் தொடங்கும். இப்போது சுழற்சி முறையில் முடி வளர்ச்சி ஏற்படும்.

செல்கள் வளர்வதும் , முதிர்வதும்,மடிவதும் , புதிய செல்கள் உருவாவ்கதும்தான் உயிர்ப்பு. மூப்பு அடையும்போது புதிய செல்கள் பிறக்கத் தாமதம் ஆவதால்,  முளைப்பதில்லை. ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும்.

சராசரியாக இந்த 3 கட்டங்களும் 5 வருட நீட்சி கொண்டது எனக் கொண்டால், 50 வயதில் 10 முறை முடி கொட்டி வளர்ந்து இருக்கும் என மதிப்பீடு செய்யலாம்.

^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>