/* ]]> */
Aug 242021
 

தற்காப்புக்கலை என்பது வன்முறையைத் தூண்டும்.

தற்காப்புக்கலை

  • தற்காப்புக்கலை என்பது வன்முறையைத் தூண்டும: இது உண்மையல்ல. தற்காப்புக் கலை என்பது உடலையும் மனத்தையும் ஒருங்கே ஒத்திசயாக இயங்க வைக்கிறது. சிலர் பள்ளி கல்லூரிகளில் கேலி, கிண்டல்களை சமாளிக்க தற்காப்புக்கலையைக் கற்கலாம். ஒருவர் முழுமையாக தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்ட பிறகு உடல் மனம் இரண்டிலும் வலிமை பெறுகிறார். இதைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்களும் தற்காப்புக்கலையைக் கடைசி வழியாகவே பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள். தற்காப்புக் கலை வன்முறையைத் தூண்டுகிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
  • சோயா உணவுகள் ஆரோக்கியமானதல்ல. சோயா உணவுகளைச் சாப்பிடுவது ஆண் பெண் இருபாலருக்குமே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.  பெண்களின் செயல்பாட்டிற்கு ஆதாரமான ஈஸ்ட்ரோஜனைப் போலவே சோயாவிலுள்ள ஐஸோஃபிலோவோன்ஸ் பைட்டோஸ்ட்ரோஜன்ஸ் ஆகிய வேதிப் பொருள்கள் செயல்படுகின்றன.  இறைச்சி, முட்டை, பால் பொருள்களுடன் சோயா பொருட்களையும் சாப்பிடலாம். சோயா உணவுகளால் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து  ஏற்படுவதாக ஆதாரங்கள் ஏதுமில்லை.
  • டெஸ்ட்ரோஸ்ட்ரோன்  ஹார்மோன் வன்முறையைத் தூண்டுகிறது: உண்மையல்ல. ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு அவரது ரத்தத்திலுள்ள ஹார்மோன் மட்டும் காரணமல்ல. மனிதர்களுக்கு வெளியிலிருந்து செலுத்தப்படும் அல்லது உடலில் இயற்கியயாகவே சுரக்கும் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோனும்கூட வன்முறையையும் ஆவேசத்தையும் தூண்டுவது இல்லை என இன்டர்நேஷ்னல் ஜர்னல் ஆஃப் என்டோக்ரைனாலஜி அண்ட் மெட்டபாலிசம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது ஒருவருக்கு தன் இளம் வயதில் ஏற்படும் மோசமான சம்பவங்கள் வன்முறையான செயல்பாட்டிற்குக் காரண்மாக இருக்க வாய்ப்புள்ளது.
  • விளையாட்டு வீரராக ஹார்மோன்களின் பங்களிப்பு  அவசியம்; உண்மையல்ல. விளையாட்டில் சிறந்து விளங்க ஒருவருக்கு விடாமுயற்சி, உழைப்பு மட்டுமே தேவை. அவரது உடலில் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் அதிக்ம சுரக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இதுபற்ரி 52 ஒலிம்பிக் விளியயாட்டு வீரர்களிடம் வெற்ரி வாய்ப்பு என எதிலும் ஹார்மோனின் பங்களிப்பு  இருப்பதற்கான சான்று கிடைக்கவில்லை. சோதனையில் குறைந்த ஹார்மோன் அளவு கொண்ட பெண் வீரர்கள் பிறரைவிட அதிக எடையைத் தூக்கினார்கள்.

*************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>