/* ]]> */
Jan 042012
 

தமிழ்மணம் வலைப் பதிவு திரட்டி தடம் மாறுகிறதா?

தமிழ் மணம் தமிழ் ப்ளாக்கர்களுக்கு ஒரு மிக முக்கிய திரட்டியாக இருந்தது. ஆனால் இப்போது அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அதன் அலெக்சா ராங்கிங்கும் சரிந்திருக்கிறது . இண்ட்லி சில மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் நம்பர் ஒன் திரட்டியாக 10000க்கும் குறைவாக அலெக்சா ராங்கிங்க் பெற்றிருக்கிறது. தமிழ் 10 நம்மை மூன்று பதிவுகளுக்கு ஓட்டுப் போட காத்திருக்க வைத்தாலும் கூட மள மளவென முன்னேறியிருக்கிறது. அயல்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்வெளிக்கென ஒரு மதிப்பு இருக்கிறது. சமீபத்தில் வந்த உடான்ஸ் திரட்டி கூட சிறப்பாக முன்னேறி வருகிறது. ஆனால் தமிழ்மணம் சரிந்து வருகிறது.. ஏன்?

தமிழ்மணம் தமிழ் திரட்டி  tamilmanam.com

தமிழ்மணம் தமிழ் திரட்டி

தமிழ்மணம் இப்போது விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. தலைப்பு பதிவாய் வர வேண்டுமானால் இவ்வளவு கட்டணம்…. இடையில் சொருகப்பட்ட பதிவாய் நம் பதிவு தெரிய இவ்வளவு கட்டணம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட். சில திரட்டிகள் விளம்பர பணம் வாங்கினால் கூட அதன் அளவு கம்மிதான். ஆனால் தமிழ்மணத்தில் நீங்கள் காசு கொடுத்தால் உங்கள் பதிவை நாள் முழுக்க முதல் பக்கத்தில் வைக்க கூட அவர்கள் ரெடி. இவ்வளவு ஏன், அது மாதிரி விளம்பர பணம் கொடுத்து முதல் பக்கத்திற்கு வந்த பதிவு கஷ்டப்பட்டு ஓட்டு பெற்று வந்த பதிவு ரெண்டுக்கும் வித்தியாசமும் தெரியாது.

அதேமாதிரி தமிழ்மணம் ரேங்கிங்க் என்பது இன்னொரு காமெடி. முதலிடம் இரண்டாமிடம் என தமிழ்மணத்திலிருந்து போகும் ட்ராஃபிக்கை வைத்து கணக்கிடுவதாய் சொல்கிறார்கள்… ஆனால் அந்தந்த ப்ளாக்கின் அன்றாட ஹிட்ஸை கொஞ்சம் பாருங்கள்… இதிலும் சில விளம்பர பிரியர்களும் பட்டுவாடாக்களும் வெளிச்சமாகும்.

தமிழ்மண ஓட்டுப்பட்டை… இது இன்னமும் பல பளாக்கர் ப்ளாகுகளில் சரியாக வேலை செய்வதே இல்லை. பாவம், ப்ளாக்கர்கள் டெம்ப்ளேட் மேல டெம்ப்ளேட் மாற்றியதுதான் மிச்சம்.

இதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல ஒரு நன்கொடை பட்டன் வேறு… அதுவும் பேபால் மூலமாக பெற்றிருக்கிறார்கள்… இது மாதிரி நன்கொடை பட்டன் போட வேண்டுமானால் நமது தளம் கமர்ஷியல் தளமாக இல்லாமல் சேவை செய்யும் தளமாக இருக்க வேண்டும்… ஆனால் சின்ன சின்ன ப்ளாக்கர்களிடமிருந்து கூட பணத்தை விளம்பரத்துக்காக உறிஞ்சும் தமிழ் மணம்… இந்த சேவை அமைப்புக்காக வைத்திருக்கும் நன்கொடை பட்டன் போட்டிருப்பது காமெய்ட் மட்டுமல்ல விதி மீறலும் கூட !

இப்படி பல வகையிலும் தமிழ்மணம்… விளம்பர பணம் நன்கொடை பணம் என பணம் பணம் என முதன்மை பணத்திற்கே என ஆகிவிட்டபடியால்தான் இது தமிழ்மணமா இல்லை தமிழ் பணமா என்ற கேள்வி பல பதிவர்கள் மனதில் எழுகிறது…

தமிழ்மணம் தன் போக்கை மாற்றாவிட்டால் விரைவில் இப்போது இண்ட்லிக்கு அடுத்தபடியாக இருக்கும் இரண்டாம் இடமும் பறிபோய்விடும்… அப்புறம் தமிழர்களின் முதன்மை திரட்டி என்ற வெட்டி ஜம்பங்கள் செய்ய முடியாது!

திருந்துமா தமிழ்மணம் திரட்டி?

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>