/* ]]> */
Mar 112014
 

புத்தாண்டு பலன்  தமிழ்ப் புத்தாண்டு-ஜய வருஷம்- 2014-15 :

NEW YEAR
கடக ராசி:

kadagam
இந்த  ‘ஜய வருஷ’ தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறார்.  வருகிற ஜூன் மாதம் 19-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  ஜூன் மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும், ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதுபோலத்தான் இருக்கும். இனி  மற்ற கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தோமானால்,  சனியும் ராகுவும்  உங்கள் 4-மிடத்தில்  சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமல்ல.   கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது  உங்களுக்கு நற்பலன்களை வழங்கக்கூடிய சஞ்சாரமாகும். இனி ஜூன் மாதம் 20-ம் தேதியன்று நிகழப் போகும் , இந்த ராகு-கேது பெயர்ச்சியின்போது ராகு உங்கள் ராசிக்கு 3-மிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 9-மிடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
குருவின் சஞ்சாரம் உங்களிடமுள்ள  ஊக்கத்தைக் குறைப்பார். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிட்டுவிடும். கொலாஸ்ட்ரால்  சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .
உங்கள் நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள்  மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கலள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.
பொருளாதார வசதியும் சரியாக இருக்கும் என்று  சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.
ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.
சனியின் சஞ்சாரமும் சரியில்லாமல் இருப்பதால், சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.                     தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.
ராகு ப்கவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும்.எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் [அயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். அந்தப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட , அந்தப் பயணங்களால் உங்களூக்கு பல நன்மைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வெற்றிகளும் உண்டாகும்.
செய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதுபோல புதிய அரசியல்வாதிகள், ,பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அது உங்கள் வாழ்ககை முன்னேற்றத்துக்கு பல வழியில் உதவும். இந்த சமயத்தில் நீங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றியடைவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தவர்கள் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவார்கள். மேலும் சிலர் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய அதிகாரமும் பொறுப்புகளும் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வுறுவர். சிலருக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகி அதன்மூலம் புகழடைவர். கலையுலகில் இவர்களுக்கான ஒரு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இவர்களுடைய திறமை வெளி உலகுக்கு தெரியும் காலம் இது. இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும்.
சகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து உங்கள் கைக்கு வந்து சேரும். இதுவரை தாமதப்பட்டு வந்த நல்ல காரியங்கள் இப்போது தடையின்றி நடக்கும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையாக உங்கள் 11-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பயனாக புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருமணத்திலும் நல்ல நிலையை அடைவார்கள். குலதெய்வ வழிபாடினைத் தொடர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் பயனாக உங்கள் முகத்தில் பொலிவு கூடும். மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மனக்கவலை நீங்கும். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்க்கை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். வேதாந்த எண்ணங்களும் உயரிய சிந்தனைகளும் உருவாகும். தந்தையின் உடல்நலமும் நீங்கள் அக்கறை காட்டும் பெரியவர்களின் உடல்நலமும் பாதிப்படையலாம். மனம் ஞான விஷயங்களில் நாட்டம் கொள்ளும். கோவில்களிலும், மடங்களிலும் உயர் பதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.
கேது பகவான் 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். மருத்துவச் செலவு கூடும். கேது பகவானின் 11-ம் பார்வை உங்கள் 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப்படையலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் சில நன்மைகளும் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் அமையும். தாய் தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம். மருத்துவச் செலவு கூடும்.

இப்படியாக , குருவின் சஞ்சாரமும் ,  சனி மற்றும் கேதுவின் சஞ்சாரமும் சரில்லையென்றாலும்,  ராகுவின் சாதகமான சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும்.
அசுப பலன்களாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்து  நீங்கள் கவலைப்படவேண்டாம். பலன்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதக அமைப்புகல் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஜாதகத்தில் உங்கள் திசா புத்தி மிக நன்றாக இருந்து, கிரகங்களும்  பலம் வாய்ந்து அமைந்திருந்தால்,  இந்த அசுப பலன்கள் பெருமளவு குறைந்து, நீங்கள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எனவே உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒருமுறை பரிசீலித்துக்கொள்ளவும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு ராகுவின்  சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும். சனியின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்றுஎள்தீபம் ஏற்றவும்.துயரங்கள் விலகும்.
இந்தப் புத்தான்டு இனிய ஆண்டாக மலரட்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டுக்குத் தொடர்புகொள்ளவும்]
*******************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>