/* ]]> */
Mar 292013
 

தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம்:

மீனம்:

  பூரட்டாதி4); உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்கலை உள்ளடக்கியது.

                           இந்த வருடத்தில் பொதுவாக நற்பலன்மகளை எதிர்பார்க்க முடியாது.   வருகிற மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 4-மிடத்தில்  சஞ்சரிப்பதால், குரு அர்த்தாஷ்டம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். சனி பகவானும் ‘அஷ்டம சனி’யாக சஞ்சரிப்பது நற்பலன்களைத் தராது. மாறாக, அசுபா பல்ன்களுக்கு வாய்ப்புண்டு. மேலும் ராகுபகவானும் 8-லும், கெது 2-லும் சஞ்சரிப்பதும், யோகத்தைத் தராது.  எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையையும் மனதி சுமந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள்  உங்கள் மனதை  வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

                  பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

            வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.

           உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.

          உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

                 தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.

       அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து நீங்கள் அஞ்சவேண்டாம். இந்த பலன்கள் மீன ராசியில் பிறந்த அனைவருக்கும் சொல்லப்பட்ட பொதுப் பலன்களாகும். ஆனால், ஜாதக அமைப்புகள் ஒருக்கொருவர் மாறுபடும். நீங்கள் பிறந்த ஜாதகத்தில்,  உங்கள் திசா-புத்தி யோகமாக இருந்து, கிரக நிலைகள் வலுவானதாக இருந்தால், இந்த அசுப பலன்கள் வெகுவாகக் குறையும். பாதிப்புகள் இருக்காது. எனவே, நீங்கள் உங்கள் சுய ஜாதகத்தைப் பரிசீலித்துக்கொள்வது நல்லது.

 பரிகாரம்:

              பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொணடக்கடலை மாலையும் ,மஞ்சள் பூ மாலையும் சாத்தி வழிபடவும். சனிக்கிழமைகளில் சிவாலயம் சென்று, சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு செந்நிற மாலை சாத்தி பூஜிக்கவும். வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து அவரை வழிபடவும்.  துயரங்கள் விலகி ஓடும்.

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.