/* ]]> */
Mar 292013
 

தமிழ்ப்  புத்தாண்டு பலன்கள் 2013 மகர ராசி விஜய வருடம் பலன்

 தமிழ்ப்  புத்தாண்டு பலன்கள் 2013:

 மகரம்:

  உதிராடம்(2.3&4);திருவோணம்; அவிட்டம்(1&2):

                                                விஜய வருஷம் என வழங்கப்படும் , இந்தப் புத்தாண்டில் நீங்கள் பெரிய மாற்றங்களையோ அனுகூலமான பலன்களையோ எதிர்பார்க்க முடியாது.  இந்த வருடம்  மே மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முங்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

                  பணப் பிரச்சினையும் எதிரிகளின் தொல்லைகளாலும் பொதுவாகவே  உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் ,கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே, ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

            மருத்துவச் செலவுகளும் குறிப்பிட்ட அளவு இருக்கத்தான் செய்யும்.  வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.

            எத்தனையோ பேருக்கு உதவியிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு உதவ யாரும் முன்வர  மாட்டார்கள்.  எனவே,  உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுஜ்க்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.

           அலுவலக வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள். . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

                 தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.

                            அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து நீங்கள் அஞ்ச வேண்டாம். இந்த பலன்கள் மகர ராசியில் பிறந்த அனைவருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டவை. ஆனால்,   ஒவ்வொருவர் ஜாதகமும் ஒன்றுக்கொன்று மாறுபடும். உங்கள் ஜாதகத்தில் உங்கள்  திசா புக்தி யோகமாக அமைந்து, கிரக நிலைகளும் பலம் பெற்று அமைந்திருந்தால், இந்த அசுப பலன்கள் மிகவும் குறைந்து போகும். எனவே நீங்கள் உங்கள்  சுய ஜாதகத்தைப் பரிசீலித்துக்கொள்வது நல்லது .

பரிகாரம்:

              பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்மாலையும் கொண்டக்கடலை மாலயும் சாற்றி வழிபட்டால், பிரச்சினைகள் பெரிதாகாமல் எளிதில் விடுபடலாம். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனுக்கு செந்நிற மாலையணிந்து வழிபடவும். வினாயகரை வழிபட்டு, ய ஆலயத்துக்கு சேவை புரியவும்.  துன்பங்கள் தொலையும்.

       இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.