/* ]]> */
Mar 222019
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்  விராகி  வருஷம் 2019-2020

tamil puththantu

ரிஷப  ராசி:

rishapam

 

த்ற்போது 7-மிடத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான், இந்த  விராகி வருஷம்   வருகிற  அக்டோபர்  மாதம்   வரப்போகும்  குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான்  உங்கள் ராசிக்கு   8-ம்  இடமான தனுசு ராசியில்  சஞ்சரிக்கிறார். தற்போது   2020 ஜனவரி மாதம் வரை சனி  பகவான்  8- மிடத்திலும் அதன் பின்னர் ராசிக்கு 9 லும் சஞ்சரிக்கிறார்.  ராகு 2-மிடத்திலும் கேது ராசிக்கு 8-லும் , சஞ்சரிக்கவுள்ளார்கள். .                 தற்போது,  நடைபெறும் குருவின் 7-மிடத்து சஞ்சாரம்  அக்டோபர்  மாதம் வரை உங்களுக்கு சகல  சம்பத்தையும் அளிக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை  வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது  அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது  முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக முடிவடையும்.

அதன் பின்  வரப் போகும் குருபகவானின் 8-மிடத்து சஞ்சாரத்தின் அனுகூலமற்ற நிலைகளைப் பார்க்கலாம். உங்கள் மன  தைரியம் குறையும். உடல்நலம்  பாதிக்கப்படும். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டம் ஏற்படும்.  உங்கள்  செல்வ வளம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் பயனாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துக்கள்  குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத்  தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை  எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.
கணவன்- மனைவி உறவில் பிளவுகள்  ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளால், தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும்கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொள்வது அவசியம்.
.               இந்த வருடம், சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 லும் அதன் பின்னர் ஜனவரி 2020க்குப் பிறகு சனி 9 லும் சஞ்சரிக்கிறார்.  8-மிட சஞ்சாரமான அஷ்டமச் சனியின் போது எண்ணற்ற துயரங்களை அனுபவித்த நீங்கள் நீங்கள் இந்த 9-மிட சஞ்சாரத்திலும் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த சஞ்சாரத்திலும் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
பணம் வீணாகச் செலவழியும். புண்ணியம் தரும் காரியங்கள் நடக்காமல் தடைப்படும். தகப்பனுக்கு அல்லது அவருக்குச் சமமான ஒருவருக்கு அந்திமக் கடன் செயய வேண்டிய கட்டாயம் நேரும். நிதமும் ஏதாவது ஒரு சோகம் அல்லது துக்கம் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். எட்டாம் இடத்தில் சொன்ன துர்ப்பலன்கள் இங்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய்கள், ஆபத்து, விபத்துகள் உண்டாகும். பணம் வரும் வழிகள் தடைப்படும். பூர்வ புண்ணியம் குறையும்.
நல்ல வாய்ப்புகள் எல்லம் கை நழுவும். அதிர்ஷ்டக் கட்டையான காலமாக இது இருக்கும். சௌபாக்கியம், புண்ணியம் ஆகியன குறையும். கெட்ட பாவச் செயல்களிலேயே மனம் ஈடுபடும். சிறைப் பயம், குடும்பப் பிரிவு, பலவகை நோய்கள் முதலியன நேரும். தெய்வ நம்பிக்கையும் ஒழுக்கமும் குறையும். நித்திய அனுஷ்டானங்களை மறப்பர். இப்படியாக அசுப பலன்களாக நிகழும்.
பெண்களுக்கு அஷ்டமச் சனியிலிருந்து விடுபட்டு, இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்களிலிருந்தும், பாதிப்புகளிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள். . இத்தகைய பாதிப்புகள், சனியின் இந்த 9-மிட சஞ்சாரத்தில் தொடராது. உங்கள் மதிநுட்பத்தால் வரவிருந்த பெரிய பாதிப்பை நீங்கள் பந்தாடிவிட்டீர்கள். உங்களால் நன்மையடைந்தவர்கள் உங்களுக்கே துரோகங்களையும் கெட்ட பெயரக்ளையும் அஷ்டம சனியின்போது ஏறப்டுத்தினார்கள். அத்தகைய தொல்லைகள் இனி உங்களைத் தொடராது. இனி வரும் காலமெல்லாம் உனக்ளது கை எல்லாத் துறைகளிலும் ஓங்கி நிற்பது உறுதியே. குழந்தைகள் விஷயத்திலும், அவரகளின் கல்வி அல்லது திருமண விஷயத்திலும் நீங்கள் ஆரம்பித்த நல்ல காரியம் மற்றவர்கள் கேலிக்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த நிலை இப்போது மாறி, பிறரின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நீங்கள் தற்போது தள்ளப்படுவீர்கள். புகுந்த வீட்டிலும் கணவரிடத்திலும் உங்களின் முயற்சிக்கும் செயலுக்கும் இந்த சனி மாற்றத்திற்குப் பிறகு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, உங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம். இதுவரை பட்ட அல்லல்களுக்கான ஒரு ஆறுதல் என்றே சொல்லலாம்.

மாணவர்களுக்கு வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும் மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும்.  உங்கள் கல்வியில் நீங்கள் முழுக் கவனம் செலுத்தியும் போராடவேண்டியிருக்கும். மேலும்  உங்கள் எண்ணங்களும் கல்வித் துறையில் நீங்கள் இதுநாள்வரை கட்டிய மனக் கோட்டைகளும் தவிடுபொடியாகும். நீங்களாகவே கல்வியைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகும். மேலும் பெற்றோர்களும் உறவினர்களும் ஆசிரியர்களும் உங்கள் போக்கிலும் நடவடிக்கையிலும் குற்றம் குறை கண்டுபிடித்துப் பேசும் அளவுக்கு உங்கள் நிலை மோசமாகலாம். இந்த நிலையை மாற்ற குருவானவர், உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்.
அரசியல்வாதிகளுக்கு தற்போது உங்கள் ராசிக்கு 9-மிடத்திற்கு  வரும் சனிபகவான் உங்களுக்கு மேல் பதவியில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் உங்களுக்கு பதவி ஆசை அல்லது முன்னேற்றப் பாதையைக் காட்டி, அது கைகூடும் நேரத்தில் அவரகளே அதைத் தட்டிப் பறிக்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படலாம். உங்களின் நியாயமான நெடுநாள் ஆசைக்கு உங்கள் மூத்த தலைவர்கள் உங்களையே ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. சனியின் 9-மிட சஞ்சாரம் அரசியலில் உங்களுக்கு நன்மை செய்யாது என்பதோடு தீமைகளையும் தடுக்காது. எனவே இறை நம்பிக்கையே கை கொடுக்கும் .

ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான  மிதுன  ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடமான  தனுசு ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். ஜோதிட விதிப்படி, 2,8-ம் இடத்து சஞ்சாரம் உகந்ததல்ல. எனவே இங்கு கூறப்போகும் ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். நன்மையைத் தரும் விதமாகவே குரு  அமைந்துள்ளதால், கெடுபலன்கள் மாறி நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது. இனி பலன்களைப் பார்க்கலாம்.

தற்போது மிதுன ராசியான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.
அரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில் குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும் அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும் தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் சனியின் சஞ்சாரம் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.
கேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு  8-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். வினாயகரை வழிபட்டு, கோவிலை சுத்தம் செய்யவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
****************************************************

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>